Connect with us

Cinema History

இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!. சிவாஜி நடிக்க மறுத்த ஹிட் படம்!.. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்ட்..

Actor sivaji: தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கி பல வருடங்கள், பல வேடங்களில் நாடகங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டவர் இவர். வீர் சிவாஜி நாடகத்தில் சிறப்பாக நடித்ததால் சிவாஜி என்கிற பெயர் இவருடன் சேர்த்துக்கொண்டது.

துவக்கம் முதலே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள குடும்ப, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். உச்சக்கட்ட சோக காட்சிகளில் நடித்து பெண்களை அழவைப்பார். இதற்காக கிண்டலடிக்கப்பட்டாலும், ஓவர் ஆக்டிங் செய்கிறார் என எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ரசிகனுக்கு புரிய வேண்டும் என்பதால் அப்படி நடிக்கிறேன் என விளக்கம் கொடுத்தார்.

இதையும் படிங்க: டேய் ஏன் ஓடுற?.. இதலாம் என்ஜாய் பண்ணு!.. சங்கடத்தில் நெளிந்த ரஜினிக்கு சிவாஜி சொன்ன அட்வைஸ்…

30 வயதிலேயே 60 வயது கதாபாத்திரத்திலும் நடிப்பார். சில படங்களில் அதை விட அதிகமாக சென்று 80,90 வயது முதியவராக கூட நடித்திருக்கிறார். இவர் ஏற்காத வேடங்களே இல்லை. சாமானியன் முதல் கடவுள் அவதாரங்கள் வரை பல வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி, மேஜர் சுந்தரராஜன், சவுகார் ஜானகி, வாணிஸ்ரீ, அசோகன், சிவக்குமார், நாகேஷ், மனோரமா என பலரும் நடித்து 1968ம் வருடம் வெளியான திரைப்படம் ‘உயர்ந்த மனிதன்’. இந்த படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கி இருந்தார்கள். இது சிவாஜியின் 125வது திரைப்படமாகும். வங்க மொழியில் வெளிவந்த ஒரு படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை பார்த்த சிவாஜி ‘எனக்கு இந்த படத்தில் நல்ல வேடம் இல்லை. வேண்டுமானால் அந்த மருத்துவர் வேடத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன்’ என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தால் பிரிந்த ஜெமினி கணேசன்- சாவித்ரி… காதல் மன்னன் இப்படிப்பட்டவரா?…

ஆனால், ஏவிஎம் நிறுவனம் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். அதோடு, கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோருக்கும், சிவாஜிக்கும் இடையே ஏற்கனவே மனவருத்தம் இருந்தது. அவர்கள் இயக்குனர் என்றால் நான் நடிக்கமாட்டேன் என மீண்டும் முரண்டுபிடித்தார். எப்படியோ சம்மதிக்க வைத்து இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் எடுத்தது.

படப்பிடிப்பு துவங்கியதும் இயக்குனர்களிடம் சிவாஜி சகஜமாக பேச துவங்கிவிட்டார். இப்படி சிவாஜி நடிக்க மறுத்து பின் ஒப்புக்கொண்டு, நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது யார் தெரியுமா? எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே!..

google news
Continue Reading

More in Cinema History

To Top