சிவாஜி படத்தால் பிரிந்த ஜெமினி கணேசன்- சாவித்ரி… காதல் மன்னன் இப்படிப்பட்டவரா?...

Gemini Ganesan-Savithri: ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக அழைக்கப்பட்டவர். இவர் அழகான தோற்றத்தினாலும் மற்றவர்களை கட்டி போடும் நடிப்பினாலும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் சக்ரதாரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின் சுமைதாங்கி, பூஜைக்கு வந்த மலர், கொஞ்சும் சலங்கை போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் அந்த காலத்தில் மட்டுமல்லாமல் அவ்வை ஷண்முகி, மேட்டுக்குடி, பொன்மனச்செல்வன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் இந்தகால நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:சரத்குமார் மீது செம கடுப்பில் இருந்த விஜயகாந்த்… கடைசில நடந்தது இதுதான்!..

இவர் சினிமாவில் நடித்தபோது தன்னுடன் பல படங்களில் நடித்த சாவித்ரியின் மீது காதல் கொண்டார். இருவரும் காதலித்த நிலையில் அது சாவித்ரியை கவனித்து கொண்ட அவரது பெரியப்பாவிற்கு பிடிக்கவில்லை. ஆனாலும் இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

சாவித்ரி சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பாசமலர், பந்தபாசம் போன்ற பல திரைப்படக்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். பெரும்பாலும் இவர்கள் ஜோடியாய் நடிக்காமல் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர். அப்படங்களும் வெற்றிப்படமாகவே இருந்தன.

இதையும் வாசிங்க:சாவித்ரிக்கு ஆசையாய் ஜெமினி கொடுத்த கிப்ட்… தல தீபாவளிக்கு கூட இப்படியா பண்ணுவீங்க…

1971ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம்தான் பிராப்தம். இதில், சிவாஜி நடித்திருந்தர். இப்படமே இவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது. இப்படம் மிகப்பெரிய தோல்வியையே சம்பாதித்தது. இதனால் சாவித்ரி மிகப்பெரிய கடனில் சிக்கி கொண்டார். ஆனால் ஜெமினி கணேசனோ அந்த நேரத்தில் இவருக்கு உதவ வில்லையாம்.

பொதுவாக ஜெமினி கணேசன் பணத்தை செலவு செய்வதில் சிக்கனவாதி. யாராக இருந்தாலும் பண விஷயத்தில் கரெக்டாக இருப்பாராம். சாவித்ரியோ அதற்கு நேர் எதிரானவர். இதனாலேயே இவர்களுக்குள் பொறாமை, ஆணவம் வர ஆரம்பித்து விட்டது என்று கூறலாம். இவர் சாவித்ரிக்கு எந்தவொரு பண உதவியும் செய்யவில்லையாம். இந்த ஒரு படமே இவர்களின் காதல் வாழ்க்கையில் மனகசப்பு ஏற்பட காரணமாகவும் அமைந்துவிட்டது.

இதையும் வாசிங்க:ஊரு ஆயிரம் பேசட்டும்!… ஆனா தலைவரோட வழி தனி வழி!… சம்பவம் என்னன்னு தெரியுமா?..

 

Related Articles

Next Story