Cinema History
நாடக நடிகர் டூ வெள்ளி விழா நாயகன்!. திரையுலகில் உச்சம்தொட்ட மைக் மோகன்…
Actor mohan: தமிழ் சினிமா ரசிகர்களால் மைக் மோகன் என அழைக்கப்பட்டவர் மோகன், 80களில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர். ரஜினி, கமல் ஆகியோர் இருக்கும்போதே அவர்களுகு பெரிய போட்டி நடிகராக இருந்தவர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், கெஸ்ட் ரோல் என எல்லாவற்றிலும் நடிப்பார்.
இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியுள்ளது. 80களில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாகவும் மோகன் இருந்தார். இவரின் படத்தில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்கும். அதற்கு காரணம் இளையராஜா. அந்த பாடல்களுக்கு மோகன் நடிப்பதை பார்த்தால் அவர்தான் பாடுகிறாரோ என்று கூட தோன்றும்.
இதையும் படிங்க: இப்ப உங்களுக்கு எல்லாமே தெரியுனுமா?!.. நிருபர்களிடம் எரிந்து விழுந்த மைக் மோகன்…
பெங்களூரை சேர்ந்த மோகன் நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டு நடகங்களில் நடித்து வந்தார். அவரை பார்த்த ஒளிப்பதிவதிவாளர் பாலுமகேந்திரா கன்னடத்தில் அவர் இயக்கிய கோகிலா படத்தில் நடிக்க வைத்தார். அடுத்து ஒரு மலையாள படத்தில் ஒய்.விஜயாவுடன் நெருக்கமாக கூட நடித்தார். தமிழில் ஹிட் அடித்த கிழக்கே போகும் ரயில் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்காக நிஜமாக மொட்டை கூட போட்டுக்கொண்டார்.
மூடுபனி படம் மூலம் மோகனை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் பாலுமகேந்திரா. மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தை கிள்ளாதே அதன்பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை ஆகிய படங்களின் வெற்றி ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை மோகனுக்கு கொடுத்தது. அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.
இதையும் படிங்க: மைக் மோகன் வாழ்க்கையில் மண்ணை போட்ட இயக்குனரின் மனைவி!.. காலம் கொடுத்த பதிலடி..!
இமேஜ் பற்றி கவலைப்படாமல் நூறாவது நாள், விதி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்தார். கமலுக்கு அடுத்து மோகனுக்கு நிறைய பெண் ரசிகைகளும் உருவானார்கள். அவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பலான படங்கள் தயாரிப்பாளருக்கு வெற்றியை கொடுத்தது. 80களில் மிகவும் பிஸியான நடிகராக இருந்தார்.
இவருக்கு நடிகர் விஜயின் தாய் மாமன் சுரேந்தர்தான் எல்லா படங்களிலும் குரல் கொடுத்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட இனிமேல் மோகனுக்கு குரல் கொடுக்கமாட்டேன் என சுரேந்தர் சொல்லிவிட்டார். மோகன் சில படங்களில் சொந்த குரலில் பேசி நடித்தார். ஆனால், எடுபடவில்லை. அப்படியே ஓரங்கட்டப்பட்டார்.
கடந்த பல வருடங்களாக நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சொல்லி வந்த மோகன் இப்போது விஜயின் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், ஹரா என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். எப்படி இருந்தாலும் மோகனை மீண்டும் திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.
வெல்கம் பேக் மோகன்!…