Connect with us

Cinema History

இப்ப உங்களுக்கு எல்லாமே தெரியுனுமா?!.. நிருபர்களிடம் எரிந்து விழுந்த மைக் மோகன்…

நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழ் சினிமா உலகில் கம்பேக் கொடுக்க வந்துள்ளார் மைக் மோகன். இவர் நடிக்கும் ஹரா படம் விரைவில் வெளியாக உள்ளது. அது தவிர தளபதி 68ல் விஜய்க்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இதுபற்றிய ப்ரஸ் மீட்டில் என்ன சொல்கிறார்னு பாருங்க.

ஹீரோவா நடிச்ச நீங்க திடீர்னு வில்லனா நடிக்கறத பத்தி…. அப்படினு ஒரு பத்திரிகையாளர் கேட்க, என்னோட முதல் படங்கள நீங்க பார்க்கலன்னு தெரியுது. நான் எப்பவுமே ஹீரோவாவும், வில்லனாவும், துணைநடிகராவும் நடிச்சிருக்கேன். உங்களுக்குத் தெரியாது.

தளபதி 68 எப்படிப்பட்ட கதை? ஆக்ஷனா?

ரொம்ப ஓவரா இல்ல. ஒரு இன்டர்வியுல 68 பத்தி முழுசா தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறீங்க நடக்குற காரியமா இது?

இப்ப நீண்ட இடைவெளிக்குப்பிறகு சினிமாவுக்கு வர்றீங்க? இப்ப எப்படி இருக்கு ஃபீல் பண்றீங்க?னு பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, ஒரு ஃபீலிங்கும் இல்லையே. நல்லா தான்யா இருக்கேன். உங்களுக்கு பிடிக்கலயா இப்ப எடுக்குற படங்கள்?

68

பிரதர் உங்களுக்குப் பிடிச்சதா இல்லையா, இப்ப எடுக்குற படங்கள்? எல்லாருக்கும் பிடிக்கற படங்கள தான எடுத்துக்கிட்டு இருக்காங்க… இதுல என்ன பிரச்சனைன்னு புரியல எனக்கு…

68க்கு அப்புறம் என்ன படம் சார்னு ஒருவர் கேட்க, 69ன்னு நக்கலாகப் பதில் சொன்னார் மோகன்.68 படத்தைப் பத்திக் கேட்டதுக்கு படம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க சார். கதையை சொல்லணும். லொகேஷனை சொல்லணும். எத்தனை நாளுங்கறது…? எல்லாமே சொல்ல முடியுங்களா சார்…? தளபதி படம் சார் வெயிட் பண்ணுங்க. ஃபேன்ஸ் இல்லாம நான் இல்ல. இத்தனை வருஷமா எனக்கு முதுகெலும்பா இருக்குறவங்க அவங்க தான்.

அவங்களுக்கு அதிருப்தி வரக்கூடாதுங்கறதுதான் என்னோட நோக்கம். ஹரா என்னோட படம். அதுதான் முதல்ல வருது. எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி.

google news
Continue Reading

More in Cinema History

To Top