Connect with us

Cinema News

இந்த பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது!. போய் வேலைய பாருங்கடா!. மன்சூர் அலிகான் காட்டம்…

நடிகை திரிஷா மன்சூர் அலி கானுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், மன்சூர் அலி கான் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

”அய்யா பெரியோர்களே திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க வந்த செய்திகளை அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டுமென்றே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டு இருக்காங்க.

இதையும் படிங்க: இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷை கனகராஜை சீண்டும் சந்தானம்!..

உண்மையில் அந்த பொண்ணஉயர்வாத்தான் சொல்லி இருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலே தூக்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பி கூட்டிட்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்தை காமெடியா சொல்லி இருப்பேன். அதை கட் பண்ணி போட்டு கழகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சரவா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவை காட்டி இருக்காங்க.

இதையும் படிங்க: நான் செஞ்ச எல்லா தப்புக்கும் ஸாரி!.. என் மேல கல்லை எறிங்க.. ஐஷு உருக்கம்!

அய்யா என்கூட நடிச்சவங்க எல்லாம் எம்எல்ஏ எம்பி ஆகிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பூஜைலயே என் பொண்ணு தில் ரூபா உங்க பெரிய ஃபேன்னுன்னு சொன்னேன். இன்னும் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும்.

360 படங்கள்ல நடிச்சிருக்கேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுத்து பேசுறவன் எல்லாருக்கும் தெரியும். சிலர் சொம்பு தூக்கிகளோட பருப்பு எல்லாம் வேகாது. திரிஷா கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சி கோபப்பட வச்சிருக்காங்கண்ணு தெரியுது. உலகத்தில் எத்தனையோ பிரச்சனை இருக்கு பொழப்பு பாருங்க அய்யா” என மன்சூர் அலிகான் தான் திட்டமிட்டு தவறாக நடிகை திரிஷாவை அவதூறாக பேசவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top