மனோரமா நடித்த வேடத்தில் நடிக்க பயந்த பானுமதி!.. கடைசியில் நடந்தது இதுதான்!…

Published on: November 21, 2023
banu
---Advertisement---

Manorama vs Banumathi: தமிழ் திரையுலகில் ஜெயலலிதா இருந்த காலத்தில் அவருக்கு இருந்த மரியாதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு முன்பாகவே பானுமதி என்ற ஒரு பெரிய ஆளுமை சினிமாவை ஆட்கொண்டிருந்தது.

பானுமதியை பார்த்து பயப்படாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அவருடன் சேர்ந்து நடிக்கவே தயங்கிய நடிகர்கள் ஏராளம். அதே போல் அவ்வளவு எளிதாக பானுமதி எந்த நடிகரையும் நடிகையையும் பாராட்டக் கூடிய நபரும் இல்லை என்ற கருத்தும் இருக்கிறது. நாடோடி மன்னன் படத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆரிடமே கோபப்பட்டு படத்திலிருந்து வெளியேறிய நடிகை அவர்.

இதையும் படிங்க: எல்லாம் போச்சே!. கதறி அழுத செல்வராகவன்!. கலாய்த்த அமீர்!.. ஆனாலும் நச் பதில்தான்…

ஒரு நடிகரோ அல்லது நடிகையோ நன்றாக நடித்தால் அவரை விட நன்றாக நடிக்கவேண்டும் என்று நினைப்பவர் பானுமதி என ஒரு பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அப்படி இருக்கும் பானுமதி நடிகை மனோரமா ஏற்ற கதாபாத்திரத்தை மனதார பாராட்டியிருக்கிறார்.

மனோரமா நடித்து வெற்றி நடை போட்ட திரைப்படம் பாட்டி சொல்லைத் தட்டாதே. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதே படம் தெலுங்கிலும் படமாக்கப்பட்டது. பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் மனோரமா ஏற்ற கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்தது பானுமதி.

இதையும் படிங்க: இது நடந்தா அமீரும் கார்த்தியும் மீண்டும் சேருவாங்க! – பயில்வான் ரங்கநாதன் சொல்லும் வழி இதுதான்!…

அந்தப் படம் படமாக்கும் போது படத்தின் தயாரிப்பாளரான எம்.சரவணன் அங்கு சென்றாராம். அப்போது சரவணனிடம் பானுமதி மனோரமா கிரியேட் செய்த கதாபாத்திரத்தை என்னால் சிறப்பாக வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை என்றும் அந்தளவுக்கு மனோரமா அற்புதமாக நடித்திருந்தார் என்றும் பானுமதி கூறினாராம்.

இதைக் கேட்டதும் சரவணனுக்கு ஒரே ஆச்சரியமாம். பானுமதியா இதை சொல்வது? என்று ஆச்சரியத்தில் நின்றாராம். ஏனெனில் பானுமதியை பற்றி சரவணனுக்கும் நன்கு தெரியும். என்னவெனில் யார் சிறப்பாக நடித்திருந்தாலும் அவரை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பாரே தவிற அவர்களை எளிதில் பாராட்டக் கூடியவர் அல்ல பானுமதி என்பதாலேயே சரவணன் ஆச்சரியத்தில் திகைத்தாராம்.

இதையும் படிங்க: த்ரிஷாவை மோசமாக கமெண்ட் அடித்த விவகாரம்.. மன்சூர் மீது பாயும் வழக்கு.. மகளிர் ஆணையம் காட்டிய அதிரடி..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.