எல்லாம் போச்சே!. கதறி அழுத செல்வராகவன்!. கலாய்த்த அமீர்!.. ஆனாலும் நச் பதில்தான்...
Director ameer: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இவரின் மூத்த மகன்தான் செல்வ ராகவன். துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியவர் இவர்தான். அவரின் தம்பி தனுஷை வைத்து எடுத்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். 7ஜி ரெயின்போ காலணி கொடுத்து அதிர வைத்தார்.
தனுஷை வைத்து புதுப்பேட்டை எடுத்து தான் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டினார். மணிரத்தினமே இவரை பார்த்து ஸ்டன்னிங் இயக்குனர் என பட்டம் கொடுத்தார். கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவனை கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார். இந்த படம் வசூலை அள்ளவில்லை என்றாலும் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது.
இதையும் படிங்க: இது நடந்தா அமீரும் கார்த்தியும் மீண்டும் சேருவாங்க! – பயில்வான் ரங்கநாதன் சொல்லும் வழி இதுதான்!…
எப்போது புதுப்பேட்டை 2 எடுப்பீர்கள்?. எப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 எடுப்பீர்கள்? என்பதுதான் பெரும்பாலான ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரிடம் தொடர்ந்து கேட்கும் கேள்வியாக இருக்கிறது. அந்த படங்களுக்கு பின் மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை. எனவே, இப்போது முழுநேர நடிராகிவிட்டார். சாணி காயிதம், பீஸ்ட், நரகாசுரன் என சில படங்களில் நடித்தார். ஒருபக்கம், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது மக்களுக்கு தேவையான தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.
இதையும் படிங்கள்: அவர்கிட்ட தர்ம அடி வாங்கினேன்!.. இயக்குனர் ஆன கதையை சொல்லும் அமீர்!..
இந்நிலையில், நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று கோப்பையை கைப்பற்றியது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட செல்வராகவன் ‘நேற்று இந்தியா தோற்றபோன பின் அழுதுகொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு அது புரியவில்லை. ஏனெனில், தந்தை அழுவதை அவர்கள் பார்த்தது இல்லை பாவம். இந்திய கிரிக்கெட் அணி தோற்றதற்காக அழவில்லை. என் நாடு தோற்று போனதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் ஏற்படும் வலியை சொல்ல முடியவில்லை. என் நெஞ்சம் உடைந்து சிதறிவிட்டது’ என பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் அமீர் ‘கண்ணீர் விட்டு அழ தோற்றது தேசம் அல்ல. கிரிக்கெட் வாரியம்தான்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவை கேவலமாக நடத்தினார்! நடந்தது இதுதான்!.. அமீரின் புகாருக்கு வாய் திறந்த ஞானவேல் ராஜா!..