கவுண்டமணிக்கும் பாரதிராஜாவுக்கும் இப்படி ஒரு பிரச்சினையா? அதிகமாக நடிக்காததற்கு இதுதான் காரணமா?

Published on: November 22, 2023
gounda
---Advertisement---

Goundamani vs Bharathiraja: தமிழ் சினிமாவில் நக்கல் மன்னன் நையாண்டி மன்னன் என நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்தவர் நடிகர் கவுண்டமணி. 80களில் கவுண்டமணி ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. எந்த முன்னணி நடிகர்கள் படங்களாக இருந்தாலும் கவுண்டமணி இல்லாத காட்சிகளை பார்க்க முடியாது.

அதுவும் இவரும் செந்திலும் சேர்ந்து அடிக்கிற லூட்டி இருக்கிறதே? நகமும் சதையுமாக எல்லா படங்களிலும் இவர்களின் கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இன்றைய தலைமுறை நடிகர்கள் பெரும்பாலும் சில கூட்டணி வைத்துக் கொண்டு நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: முத்துவை கொடுமைப்படுத்தும் மீனா.. மனோஜ் சிக்க போகும் நேரம் வந்துடுச்சே..! என்ன செய்ய போகிறார் ரோகினி..?

ஆனால் கவுண்டமணி காலத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்துதான் படத்தை கொண்டு போயிருப்பார்கள். அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் கிண்டலடிப்பதும் கலாய்ப்பதுமாக ரசிகர்களை மகிழ்வித்திருப்பார்கள். இந்த நிலையில் கவுண்டமணி அதிகமாக பாரதிராஜாவின் படங்களில் நடித்ததில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதற்கான காரணத்தை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். அதாவது நகைச்சுவை என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை , அது ஒரு கலை என்றும் கூறினார். மேலும் பாரதிராஜாவுக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட் இருக்கட்டும்!. விஜய் கிஃப்ட் கொடுத்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?!..

இதன் காரணமாகவே பாரதிராஜாவின் படங்களில் கவுண்டமணி அதிகமாக நடித்திருக்கமாட்டார் என்றும் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கூட கவுண்டமணி நடித்த பெரும்பாலான காட்சிகளை பாரதிராஜா வெட்டி எடுத்துவிட்டதாகவும் அதிலிருந்தே கவுண்டமணி பாரதிராஜாவின் படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு மீண்டும் கிடைத்த காண்ட்ராக்ட்… கடுப்பில் கோபி… ராதிகா செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.