Cinema History
சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!
Sivaji vs MGR: மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா உள்ளிட்டோர் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான படம் ஜல்லிக்கட்டு. யூடியூபில் பிரபலமான டூரிங் டாக்கீஸ் சேனலைத் தற்போது நடத்தி வரும் நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தனது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
இளையராஜா இசையமைத்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இளம் வயதிலேயே வன்முறைப் பாதைக்குச் செல்லும் இளைஞரை நல்வழிப்படுத்தும் நோக்கோடு நீதிபதி ஒருவர் சிறப்பு அனுமதி பெற்று அவரைத் தனது வீட்டில் வீட்டுக் காவலில் வைப்பார். அந்த இளைஞரின் கோபத்தை நல்வழிப்படுத்தி, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்யும் நீதிபதியாக சிவாஜி மிரட்டியிருப்பார்.
இதையும் படிங்க: லீக்கான ‘தளபதி 68’ பட கதை!. போட்றா வெடிய!.. விஜய்க்கு இது வேற லெவலா இருக்குமே!..
மொட்டைத் தலையுடன் தகடு தகடு என்கிற ஃபேமஸான வசனம் மூலம் சத்யராஜூம் படத்துக்கு மைலேஜ் ஏத்தியிருப்பார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் மணிவண்ணனும் சத்யராஜும் தலைவா என்று அழைத்துக் கொள்வார்களாம். இந்தப் பழக்கத்தில் செட்டில் இருந்த மாஸ்டர் ஒருவர் சிவாஜியிடம் போய், `தலைவா ஷாட் ரெடி’ என்று சொல்லி மாட்டிக்கொண்டாராம்.
`ஏன்டா உங்க பழக்கம் என் வரைக்கும் வந்துடுச்சா’ என்று கூறி சிவாஜி சத்யராஜையும் மணிவண்ணனையும் கலாய்க்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. படம் ரிலீஸாகி வெள்ளி விழா கொண்டாடிய நிலையில், படத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கலந்துகொண்டு படக்குழுவை சிறப்பித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை அழைத்திருக்கிறார்கள்.
அவரும் மகிழ்ச்சியோடு கலந்துகொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். சிவாஜி – எம்.ஜி.ஆர் இடையே இருந்த போட்டி அப்போதைய காலகட்டங்களில் மிகப்பெரிய விவாதப்பொருளாக இருந்தது. அந்த சமயத்தில் அன்போடு தனது தம்பி சிவாஜி நடித்த படத்தின் விழாவில் கலந்துகொண்டு தனது பெருந்தன்மையைக் காட்டியிருப்பார் எம்.ஜி.ஆர். ஜல்லிக்கட்டு வெள்ளிவிழாவில் இன்னொரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் சொல்லாத வார்த்தை! கமலை இப்படியே திட்டுவீங்க பூர்ணிமா?
முதலில் இதற்கு எம்.ஜி.ஆர் மறுப்புத் தெரிவித்தார். ஆனாலும் விடாத நம்பியார், எனக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கன்னத்தைக் காட்டி அந்த அன்பு முத்தத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டதோடு, எம்.ஜி.ஆருக்கும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுதான் தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.