Connect with us
poornima

Biggboss Tamil 7

பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் சொல்லாத வார்த்தை! கமலை இப்படியே திட்டுவீங்க பூர்ணிமா?

BiggBoss Season 7: பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன்தான் கொழுந்துவிட்டு எரிகின்றது. முழுவதும் இளைஞர் பட்டாளத்துடன் ஆட்கொண்டுள்ள இந்த பிக்பாஸ் சீசன் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஆரம்பத்தில் இந்த சீசனில் பூர்ணிமா மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் அன்பையும் கொண்டிருந்தனர். ஆனால் எப்பொழுது மாயாவுடன் கூட்டணி அமைத்தாரோ அதிலிருந்தே பூர்ணிமா மீது வெறுப்பை கொட்ட ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

இதையும் படிங்க: லீக்கான ‘தளபதி 68’ பட கதை!. போட்றா வெடிய!.. விஜய்க்கு இது வேற லெவலா இருக்குமே!..

இதில் கடந்த வாரம் கமல் பூர்ணிமாவை கலாய்த்து தள்ளினார். என்ன பூர்ணிமா எதுவும் பேசனுமா ? என்று கேட்க உடனே எழுந்து நின்ற பூர்ணிமாவின் தொண்டை அடைக்க கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு பேசினார். அப்போது கூட கவிதை நடையில் ஏதோ கமல் சொல்ல அதைக் கூட தன்னை கலாய்த்துதான் பேசினார் கமல் என்று புகார் கூறினார் பூர்ணிமா.

இந்த நிலையில் இந்த நிகழ்வை பற்றி விக்ரமுடன் ஆலோசித்த பூர்ணிமா நேற்று கமல் சார் குடிகார அங்கிள் மாதிரி பேசிகிட்டு இருந்தார் என்ற ஒரு வார்த்தையை முன்வைத்தார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: பஞ்சாயத்தெல்லாம் ஓரங்கட்டியாச்சு! நமக்கு தொழில்தான் முக்கியம் – சூர்யாவுடன் மீண்டும் கூட்டணியா?

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வரலாற்றிலேயே கமலை இதுவரை யாரும் இப்படி சொன்னதில்லை. நன்றாக பேசுகிறார் கமல். நல்ல அறிவுரைகளை வழங்குகிறார் என்றுதான் கூறி வந்தார்கள். ஆனால் பூர்ணிமா மாதிரி யாரும் கமலை இதுவரை திட்டியதில்லை.

அதனால் இதைப் பற்றி வரும் வாரத்தில் கமல் பூர்ணிமாவிடம் கேட்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சக போட்டியாளரான அர்ச்சனா மீது நாளுக்கு நாள் பூர்ணிமாவுக்கு பொறாமை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதெல்லாம் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக பூர்ணிமா இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: அடுத்த குட்டிக்கதைக்கு ரெடியான ரஜினி!.. லால் சலாம் ஆடியோ விழா அப்டேட் இதோ!..

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top