Cinema History
பாக்யராஜால் பார்த்திபனை வச்சு செஞ்ச இளையராஜா… என்ன நடந்துச்சு தெரியுமா?
Parthiban vs Ilayaraja: இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தன்னுடைய சினிமா பயணத்தை இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகத் தொடங்கியவர். இதுவரை 15 படங்களை இயக்கியிருக்கும் அவர் 13 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
இதுதவிர கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். வார்த்தை விளையாட்டில் கில்லாடியான பார்த்திபனுக்குத் தனது குரு கே.பாக்யராஜால் ஒரு சோதனையும் வந்திருக்கிறது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பார்த்திபன், 1984-ல் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக வேலையில் சேர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் சொல்லாத வார்த்தை! கமலை இப்படியே திட்டுவீங்க பூர்ணிமா?
1984-1991 இடைப்பட்ட காலத்தில் மட்டும் பாக்யராஜிடம் இவர் 20 படங்களுக்கு உதவி இயக்குநராக வேலை பார்த்திருக்கிறார். ரஜினி நடித்த ராணுவ வீரன் படம்தான் இவர் முதல்முறையாகத் திரையில் தோன்றிய படம். பாக்யராஜ் இவரின் திறமையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்டு தாவணிக் கனவுகள் படத்திலேயே ஒரு ஷாட்டை இவரை மட்டும் தனியாக ஷூட் செய்ய அனுப்பியிருக்கிறார்.
அப்படி இவர் எடுத்த முதல் ஷாட் ஹவுஸ்ஃபுல் என்கிற ஒரு போர்டைத்தானாம். அந்தப் பேரிலேயே பின்னாட்களில் இவர் ஒரு படம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த சமயம், தனியாக ஒரு படம் பண்ணலாம் என்று நினைத்து அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் பார்த்திபன்.
அப்போதைய காலகட்டத்தில் எல்லா புதுமுக இயக்குநர்களுக்கும் தன்னுடைய முதல் படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனை உண்டு. அதன்படி, முதல் பார்வை என்கிற பெயரில் அவர் தொடங்கிய முதல் படத்துக்கு இளையராஜாவிடம் போய் கேட்கலாம் என்று நினைத்து, கே.பாக்யராஜிடமும் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: லீக்கான ‘தளபதி 68’ பட கதை!. போட்றா வெடிய!.. விஜய்க்கு இது வேற லெவலா இருக்குமே!..
அப்போது பாக்யராஜ் தனியாக இசையமைக்கத் தொடங்கியிருந்த நேரம். அது இளையராஜாவுக்கு ஒரு கோபத்தையும் உண்டாக்கியிருந்ததாம். இதனால், பாக்யராஜ் அவரிடம் போய் கேளுங்கள். அவர் சரி என்று சொன்னால் வேலையைத் தொடங்குங்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்போது, பார்த்திபன் அவருடைய நண்பர் பழனிச்சாமி என்பவருடன் சேர்ந்து இளையராஜாவைப் போய் பார்த்திருக்கிறார்கள்.
இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டாராம். `ஏன் நீயும் ஒரு ஆர்மோனியப் பெட்டியை வைச்சிக்கிட்டு மியூஸிக் போட வேண்டியதுதானே’ என்று சொல்லிவிடாராம். பின்னர் அந்தப் படம் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைவிடப்பட்டது. அதற்குப் பின்னர் பார்த்திபன், முதன்முதலில் இயக்கிய புதிய பாதை படத்துக்கும் இசையமைக்கக் கேட்டதற்கு இளையராஜா மறுத்த நிலையில், சந்திரபோஸ் அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!