Connect with us

Cinema News

ஏ.ஆர். ரஹ்மானுக்கே கச்சேரி நடத்த கிளாஸ் எடுப்பாரு போல!.. அனிருத்தின் ஹுகும் டூர்.. பேடாஸ் என்ன ஊறுகாயா?

இந்த ஆண்டு பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்தாலும் அனிருத் உள்ளூர் முதல் வெளிநாடு வரை தனது இசைக் கச்சேரிகளையும் கலக்கலாக நடத்தி முடித்தார். இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான ஹுகும் டூர் என தற்போது அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அலப்பறையை கிளப்பி உள்ளார்.

ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் இந்த ஆண்டு ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் போட்ட காவாலா முதல் ஹுகும் வரை எல்லா பாடல்களுமே செம ஹிட் அடித்தன.

இதையும் படிங்க: காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..

அதன் பின்னர் ஷாருக்கானின் ஜவான் படத்துக்கும் விஜய்யின் லியோ படத்துக்கும் இசையமைத்து இந்த ஆண்டின் ஹிட்டான இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானையே ஓவர்டேக் செய்து விட்டார்.

மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இந்த ஆண்டு சென்னையில் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேரியில் நடந்த மிகப்பெரிய மோசடி பெரிய பஞ்சாயத்தை கூட்டிய நிலையில், அனிருத் மட்டும் எப்படி எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இந்த ஆண்டு பல கச்சேரிகளை நடத்தி விட்டு அடுத்து அடுத்த ஆண்டுக்கும் கச்சேரிகளை நடத்தப் போவது குறித்து தற்போது செம கெத்தாக அறிவிப்பு வெளியிட்டுள்ளாரே என பலரும் வாயடைத்து போயுள்ளனர். நாளை முதல் எந்த எந்த நகரத்தில் கச்சேரி இருக்கும் என்கிற அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் வா அசுரா வைப்ஸ்!.. கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாட்டு எப்படி இருக்கு?..

தி ஹுகும் டூர் 2024 என டைட்டிலை ஜெயிலர் படத்தை ஹைலைட் செய்து வைத்து விட்டு கடைசியாக பேடாஸை ஊறுகாய் போல தொட்டுக் கொண்டு விஜய் ரசிகர்களையும் கவர் செய்ய முயற்சித்துள்ளார் அனிருத். இதுதான் தென்னை மரத்துல ஒரு குத்து, பனை மரத்துல ஒரு குத்தா? என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்த ஐஎம் ஜஸ்ட் அன் ஆர்டினரி பர்சன் பாடல் ஹாலிவுட் இசையமைப்பாளர் பீக்கி பிளைண்டர்ஸ் வெப்சீரிஸுக்கு போட்ட பாடலின் காப்பி என்கிற சர்ச்சையும் வெடித்து பிரச்சனையானது உற்று நோக்க வேண்டியது.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top