Connect with us

Cinema News

தனுஷின் வா அசுரா வைப்ஸ்!.. கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாட்டு எப்படி இருக்கு?..

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

வரும் டிசம்பர் 15ம் தேதி அந்தப் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப் பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்துள்ள லால் சலாம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலய்யா பண்ண பலான வேலை.. பற்ற வைத்த விசித்ரா.. கமல் இப்போ வாய்ஸ் கொடுப்பாரா?

மேலும், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர். சியின் அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களுக்கு சிம்ம சொப்பனமாக பாக்ஸ் ஆபிஸில் வேட்டு வைக்கப் போகிறது.

இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷனாக ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் பாடிய கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் பாடல் இன்று வெளியானது.

இதையும் படிங்க: பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை யாரும் சொல்லாத வார்த்தை! கமலை இப்படியே திட்டுவீங்க பூர்ணிமா?

சமீப காலமாக தமிழ் படங்களில் ஆங்கிலம் கலந்த பாடல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ஐ எம் தி டெவில்.. என ஆரம்பித்து கில்லர்.. கில்லர் கேப்டன் மில்லர்” என ஒலிக்கும் பாடலில் தனுஷ் பாடும் தமிழ் வரிகள் அனைத்தும் பாடல்களாக இல்லாமல் வசனங்களாக நீள்கின்றன.

அசுரன் படத்தில் இடம்பெற்ற “வா அசுரா” பாடலின் வைபாக உள்ளது தெளிவாக தெரிகிறது. லியோ படத்தில் விஜய் பாடிய “நா ரெடி தான் வரவா” பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது போல அல்லாமல், கொல வெறியை தூண்டும் பாடலாக இந்த பாடல் தெறிக்கிறது.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

 

google news
Continue Reading

More in Cinema News

To Top