Connect with us

Bigg Boss

அந்த பெரிய ஹீரோவே மிரட்டினாரு!.. விசித்ரா கணவர் போட்ட வெடிகுண்டு.. கமலையும் அசிங்கப்படுத்திட்டாரு?..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா தனக்கு சினிமா வாழ்க்கையில் நடந்த மிக மோசமான நிகழ்வு என தெலுங்கு படத்தில் 20 வருஷத்துக்கு முன்பாக நடைபெற்ற ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வை வெளிப்படையாக பேசியிருந்தார்.

விசித்ரா அந்த நடிகர் யார் என்பதை ரிவீல் செய்யவில்லை என்றாலும், டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் பாலய்யா எனும் பாலகிருஷ்ணா தான் அந்த நடிகர் என்றும் விசித்ராவும் அவரும் சேர்ந்து நடித்த படக் காட்சிகளையும் வெளியிட்டு நெட்டிசன்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா?.. வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!..

மேலும், விசித்ராவை கன்னத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் அறைந்தார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பிய நிலையில், பிரபல தெலுங்கு ஸ்டன்ட் மாஸ்டர் ஏ. விஜய் தான் அவர் என்பதை விசித்ராவின் கணவர் ஷாஜியே ஒப்புக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நாங்கள் நண்பர்கள் கூட இல்லை என்றும் ஹோட்டலில் மேனேஜராக இருந்த நிலையில், விசித்ராவுக்கு அறைகளை மாற்றிக் கொடுத்து அவரை காப்பாற்ற ஒரு சக மனிதனாக மட்டுமே உதவினேன் எனக் கூறியுள்ளார் ஷாஜி.

இதையும் படிங்க: முதுகில் குத்தினாலும் திமிரோட தான் நிற்பேன்… ஞானவேல் ராஜா விஷயத்தில் ஓயாத பஞ்சாயத்து..!

மேலும், இந்த விவகாரத்தில் நீ ஏன் தலையிடுற என்றும் இது எங்க படக்குழு பிரச்சனை என அந்த பெரிய நடிகரே மிரட்டினார் என்றும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஹோட்டலை செக்கவுட் செய்து விடுங்கள், என் ஹோட்டலில் இப்படி நடப்பதை அனுமதிக்க முடியாது என கூறினேன் என்றார்.

திருமணத்துக்கு பிறகும் வழக்குகள் அதுதொடர்பாக சென்றன. ஆனால், நடிகர் சங்கம் முதல் அனைவரும் எங்களை வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினர். யாருமே எங்களுக்காக துணை நிற்கவில்லை என்றார்.

இந்த வாரம் கமல் சார் இதை பற்றி பேசுவாரா என ஜோ மைக்கேல் கேட்க, நிச்சயம் இந்த டாப்பிக்கை அவர் பேசாமல் கடந்து சென்று விடுவார் என அசிங்கப்படுத்தி விட்டார். என்ன ஆகுது என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top