Connect with us

Cinema News

நடிகைகளை பத்திரமாக பார்த்து கொள்வதில் மாமனிதன்.. சீனு ராமசாமியை சூப்பரா சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!..

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக வலைப்பேச்சு பிஸ்மி பற்ற வைத்த நிலையில், அதற்கு சீனு ராமசாமி சாதாரணமாக ஒரு பதிலையும் கொடுத்துள்ளார்.

தன்னை பற்றி தவறான தகவலை பிஸ்மி சொல்லியிருந்தால் அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்காமல் அவரை அண்ணன் ஒருவர் என சொல்வது எல்லாம் என்ன வகையறாவில் சேர்ப்பது என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா?.. வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!..

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் மன்சூர் அலி கானை டிஸ்சார்ஜ் செய்து விட்டு தற்போது சீனு ராம்சாமியை அட்மிட் செய்து காலையில் இருந்தே கன்டென்ட் கிடைத்து விட்டது என பொளந்து எடுத்து வருகிறார்.

விசித்ரா விவகாரத்தில் பாலய்யா பெயர் ஒரு பக்கம் மாட்டிக் கொண்டு முழிக்க இன்னொரு பக்கம் மனிஷா யாதவை கொடைக்கானலில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சீனு ராம்சாமி பெயர் சிக்கி உள்ளது.

இதையும் படிங்க: காதலருக்கே தெரியாமல் பாவனி பார்த்த வேலை!.. ரொம்ப கெட்ட பழக்கம் என எச்சரித்த அமீர்!..

ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது, “பெண்களை தெய்வமாக மதிப்பதில் தர்மதுரை. தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை பத்திரமாக பார்த்து கொள்வதில் மாமனிதன். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் பெண்களிடம் யாராவது தவறாக நடந்தால்.. அதை தட்டிக்கேட்கும் இடி முழக்கம்.” என சீனு ராமசாமி இயக்கிய படங்களை வைத்தே அவரை பாராட்டுவது போல நக்கல் ட்வீட் ஒன்றை போட்டு சீண்டியுள்ளார்.

திரிஷா மற்றும் மன்சூர் அலி கான் விவகாரம் இன்னும் எந்த எந்த புத்துக்குள் என்ன என்ன பாம்பு ஒளிந்திருக்கிறது என்பதை கொண்டு வருமோ தெரியவில்லை.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top