இப்படி ஆகிப்போச்சே!.. எல்லாத்துக்கும் அவர்தான் காரணமாம்!.. விடாமுயற்சி சூடான அப்டேட்..

Published on: November 23, 2023
ajith
---Advertisement---

Vidamuyarchi: துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரை அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் தான் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு, அவரின் கதை பிடிக்காமல் அவரை தூக்கிவிட்டு, மகிழ் திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அதன்பின்னரும் கதை உறுதி செய்யப்படாமல் பல மாதங்கள் இழுத்தது. ஒருபக்கம் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்றப்போய்விட்டார். ஒருவழியாக சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு அசர் பைசான் எனும் நாட்டில் துவங்கியது. இது ரஷ்யாவுக்கு அருகில் இருக்கும் நாடு. சார்ஜாவிலிலிருந்து மூன்று மணி நேரம் விமானத்தில் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க: தளபதி 68 பட டைட்டில் ரெடி!.. டிக் செய்த விஜய்!. எப்போ சொல்றாங்க தெரியுமா?..

இங்கு மொத்த இந்தியர்களின் என்ணிக்கையே ஒரு லட்சம் பேர்தான் என சொல்லப்படுகிறது. எனவே, படப்பிடிப்பிற்கு எந்த தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவதற்காக இந்த இடத்தை மகிழ் திருமேனி தேர்ந்தெடுத்தார். அதோடு, ஏற்கனவே படப்பிடிப்பு பல மாதங்கள் தாமதம் என்பதால் 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து ஒரே கட்ட படப்பிடிப்பாக படத்தை முடித்துவிடுவது என முடிவெடுத்தனர்.

அஜித்தும் அதற்கு ஒத்துக்கொண்டார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்து வந்தார். மேலும், நடிகர் அர்ஜூனும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திடீரென கடந்த வாரம் மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிவிட்டது.

இதையும் படிங்க: தப்பா இருந்தா ஐ யம் சாரி!.. திரிஷா விவகாரத்தில் இறங்கிவந்த மன்சூர் அலிகான்…

என்னாச்சி என விசாரித்தால் தொடர்ச்சியாக நடிக்க அஜித் ரெடி என்றாலும் மகிழ் திருமேனிக்கு அந்த மாதிரி வேலை செய்து பழக்கம் இல்லை. எனவே, ஒரு இடைவெளி எடுத்து கொள்ளலாம் என முடிவெடுத்தார். ஆனால், அவர் சொன்னால் தயாரிப்பு நிறுவனம் கேட்காது என்பதால் அஜித்திடம் சொல்லி அவர் சொல்வது போல சொல்லி பிரேக் எடுத்துக்கொண்டாராம்.

எப்படியும் இன்னும் சில நாட்கள் கழித்து படக்குழு மீண்டும் அசர் பைசான் நாட்டுக்கு செல்லும் என சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.