Entertainment News
ஜிகினமணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி!.. உடலை ஒட்டிய ஆடையில் சும்மா உஷ்ணத்தை கிளப்புறாரே!..
20 வயதே ஆன இளம் புயல் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கடல் கன்னி போல உடம்பை ஒட்டிய ஆடையை உடுத்திக் கொண்டு அழகு அழகாக அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பல லட்ச லைக்குகளை அள்ளி வைரல் ஆகி வருகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 படத்தில் மாணவியாக அறிமுகமானவர் தான் கீர்த்தி ஷெட்டி. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு விஜய்சேதுபதி தெலுங்கில் நடித்து வெளியான உப்பென்னா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: நடிக்கத் தெரியலைன்னு தான் மனிஷாவை மாற்றினேன்!.. பாலியல் தொல்லை கொடுக்கல.. சீனு ராமசாமி பதில்!..
உப்பென்னா திரைப்படம் கீர்த்தி ஷெட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், நானி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்க ராய் படத்திலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் சாய் பல்லவி கீர்த்தி ஷெட்டியை ஓவர் டேக் செய்திருப்பார்.
லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான வாரியர், வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கஸ்டடி என வரிசையாக படங்கள் கிடைத்தும் கீர்த்தி ஷெட்டிக்கு ஹிட் எதுவும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்.. ஹிட் பட இயக்குனர் சொல்றதை கேளுங்க…
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வந்த நிலையில், அந்தப் படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு நடிகர்கள் மாற்றப்பட்டு உருவாகி வருகிறது. வா வாத்தியாரை மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி உள்ளிட்ட படங்கள் தான் தற்போது கீர்த்தி ஷெட்டிக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகினா போன்ற கலர் கலர் உடைகளை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.