Connect with us

Cinema History

அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்.. ஹிட் பட இயக்குனர் சொல்றதை கேளுங்க…

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தரராஜன் ஒருமுறை இப்படி சொல்லி இருக்கிறார்.

அம்மன்கோவில் கிழக்காலே படம் கம்போசிங் நேரம். ஓட்டல் அறையில் தங்கி இருந்தேன். டிவியில் ஒளியும் ஒலியும் போட்டாங்க. பிளாக் அண்ட் ஒயிட் பாட்டை மெய்மறந்து கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ அழகன்யா, பேரழகன்னு பின்னாலே இருந்து ஒரு சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அது இசைஞானி இளையராஜா.

எப்போ உள்ளே வந்தாருன்னே தெரியல. அவர் பேரழகன்னு சொன்னது புரட்சித்தலைவர் எம்ஜிஆரைத்தான். மதுரை வீரன் படத்தில் வரும் நாடகம் எல்லாம் கண்டேன் என்ற பாடலைப் பார்த்து விட்டுத் தான் இப்படி சொன்னார்.

R.Sundararajan

RS

பொதுவாக பெண்களின் அழகுதான் ஆண்களுக்குப் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கே இந்த தலைவரின் அழகு பிடிக்கும். அது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும் தான். இளவரசன் டிரஸ்ஸை எந்த டாப் ஸ்டார்கள் போட்டாலும் நல்லா இருக்காது. அது ரசிக்க முடியாது.

இளவரசன் டிரஸ்ஸைப் போட்டு, கத்தியை எடுத்து எம்ஜிஆர் போஸ் தருவது போல வேறு யாரும் தர முடியாது. அவ்வளவு அழகு அவரிடம் மட்டும் தான் இருக்கும். மேற்கண்ட தகவலை இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், அரச கட்டளை, ராஜா தேசிங்கு, சக்கரவர்த்தி திருமகள், மன்னாதி மன்னன், ராஜமுக்தி, நாடோடி மன்னன், குலேபகாவலி, விக்ரமாதித்யன் போன்ற படங்களில் இளவரசராகவும், மன்னராகவும் வேடம் போட்டு கத்திச்சண்டைகளில் பின்னிப் பெடல் எடுப்பார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top