Cinema History
படப்பிடிப்பில் யார் கூப்பிட்டும் நடிக்க வராத ரகுவரன்!. அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!…
கதாநாயகனாக நடிக்க துவங்கி பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் குணச்சித்திர நடிகராக மாறி அதன்பின் அசத்தலான வில்லனாக மாறியவர் ரகுவரன். ரகுவரன் போல வில்லத்தனம் செய்த இன்னொரு நடிகரை தமிழ் சினிமா ரசிகர்கள் இனிமேல் பார்க்கவே போவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரின் குரலே அவருக்கு பெரிய பலம். அந்த குரலில் இருக்கும் வசீகரம் ரசிகர்களை இழுக்கும். நடிகர் ரஜினிக்கு இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் நடிப்பில் வெளிவந்த சிவா, ராஜா சின்ன ரோஜா, மிஸ்டர் பாரத், மனிதன், ஊர்க்காவலன், அருணாச்சலம், பாட்ஷா, முத்து, சிவாஜி ஆகிய படங்களில் அவரை நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?
குறிப்பாக பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக ரகுவரன் கலக்கியிருப்பார். இப்போது வரை பல படங்களிலும் வில்லன்கள் அதை பின்பற்றி நடிக்கிறார்கள். ஆனாலும், ரகுவரனை போல நடிக்க முடியவில்லை. காதலன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக கலக்கியிருக்கிறார்.
வில்லன் மட்டுமில்லை குணச்சித்திர வேடத்திலும் அசத்தி விடுவார். முகவரி, ஆஹா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். கரு பழனியப்பன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த 2006ம் வருடம் வெளியான திரைப்படம் சிவப்பதிகாரம்.
இதையும் படிங்க: ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கும் ஒரே வில்லன் ரகுவரன்தான்! அவர் இடத்துல இவர வச்சா எப்படி?
இந்த படத்தில் விஷாலின் குருவாக ரகுவரன் அசத்தியிருப்பார். இந்த படத்தில் விஷால் படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக இருந்து பின் அவரை வழிநடத்தும் வேடத்தில் ரகுவரன் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது ரகுவரன் கேரவானை விட்டு வரவே இல்லையாம். உதவி இயக்குனர்கள் என பலரும் அழைத்தும் அவர் வரவில்லை.
அதன்பின் கரு பழனியப்பனே சென்று இதுபற்றி கேட்க ‘அந்த புரபசர் எப்படி உட்காருவார்?’ என கேட்டாராம். அதாவது அந்த கதாபாத்திரம் எப்படி நடக்கும்? எப்படி பேசும்?.. எப்படி உட்காரும் என்பதை முடிவு செய்யாமல் நடிக்க போகக்கூடது என நினைத்து யோசித்து கொண்டே இருந்தாராம். தொழிலில் அப்படி ஒரு அக்கறை அவருக்கு…
இதையும் படிங்க: ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்