கமல் சொன்ன ஒரு வார்த்தை! அப்பவே ஜெயிச்சுட்டோம்னு தெம்பு வந்தது – அந்தப் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?

Published on: November 26, 2023
sethu
---Advertisement---

Actor Kamalhasan: பாலாவின் இயக்கத்தில் விக்ரமுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் சேது. கந்தசாமி தயாரிப்பில் வெளிவந்த சேது படம் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த பின்னர்தான் ரிலீஸானது. ஆரம்பத்தில் இந்தப் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

கிட்டத்தட்ட 99 ஸ்க்ரீன் செய்தும் படத்தை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்களே தவிற யாரும் வாங்க முன்வரவில்லையாம். இதற்கு ஒரு படி மேலாக படம் ஆரம்பிக்கும் போதே ஏகப்பட்ட தடங்கல்களை சந்தித்திருக்கிறது.

இதையும் படிங்க: கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…

படம் பூஜை போட்டதும் சினிமாத் துறையினர் ஸ்டிரைக்கை அறிவித்திருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அமீரும் பாலாவும் நேராக பாரதிராஜாவை சந்திக்க சென்றார்களாம். அப்போது இவர்களை யார் என்றே தெரியாதாம் பாரதிராஜாவுக்கு.

அவரிடம் போய் பாலாவும் அமீரும் ‘ நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு நீண்ட நாளுக்கு பிறகு இந்தப் படத்தை எடுக்கிறோம். இந்த நேரத்தில் ஸ்டிரைக்கை அறிவித்தது உங்களுக்கே நியாயமாக தெரிகிறதா?’ என்று முறையிட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: பாரதிராஜாவை வச்சு ஒரு சின்னப் பொய் சொன்னேன்! இப்படி ஆகும்னு நினைக்கல – சுகன்யா சொன்ன சீக்ரெட்

உடனே கோபமடைந்த பாரதிராஜா யாருட நீங்க? வெளியே போங்க என்பது மாதிரி பேசியிருக்கிறார். இவர்கள் புலம்பிக் கொண்டே ‘இவருக்கென்ன ஏகப்பட்ட படங்களை எடுத்து நல்லா சம்பாதிச்சிட்டாரு’ என்று சொல்லிக் கொண்டே வெளியேறி விட்டார்களாம்.

அப்போது இவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன்தானாம். அவர்தான் இவர்களை பல லேப்களுக்கு அழைத்துக் கொண்டு சென்று தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

அந்த சமயம் பிரசாத் லேப்பில் கமல் இருக்க இவர்களை அழைத்துக்கொண்டு சென்றாராம் சித்ரா லட்சுமணன். ஏற்கனவே அமீர் கமலின் தீவிற வெறியனாம். கமலை பார்த்ததும் இருக்கிற பிரச்சினையெல்லாம் மறந்து விட்டு கமலையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

அப்போது கமல் இவர்களை பற்றி விசாரித்திருக்கிறார். சேது பட பிரச்சினையை சொன்னதும் அதற்கு கமல் ‘ ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். படம் நன்றாக இருக்கிறதாம். பாப்போம்’ என்று சொன்னாராம். கமல் வாயிலிருந்து இந்த வார்த்தையை கேட்டதும் அமீருக்கு ‘அவ்வளவுதான் நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று தோன்றியதாம்.

உடனே நண்பர்கள் , உறவினர்கள், தெரிந்தவர்கள் என இவர்களின் பணத்தை புரட்டி படத்தை ரிலீஸ் செய்ய படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.