கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…

Published on: November 26, 2023
ajithkumar
---Advertisement---

Ajithkumar: தமிழ் சினிமாவில் அமர்க்களம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்குமார். பின் வாலி, காதல் கோட்டை போன்ற பல திரைப்படங்களின் மூலம் சினிமாவில் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினார்.

இவர் பொதுவாக தன்னை பற்றி எந்தவொரு விளம்பரமும் செய்யாதவர். எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர். தன் படமாக இருந்தாலும் சரி எந்த விதமான புரொமோஷனிலும் கலந்து கொள்ளமாட்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்.

இதையும் வாசிங்க:ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…

தான் செய்யும் உதவியை பற்றி வெளியில் தெரியக்கூடாது என நினைப்பவரும் கூட. பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிவருகிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் பெரும்பாலும் அனைவராலும் பேசப்படும் செய்தி அடுத்த மாதம் நடைபெறவுள்ள கலைஞர் 100 விழாவில் அஜித் கலந்து கொள்வாரா என்பதுதான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித்குமார் ஏற்கனவே இதற்கு முன் நடந்த கலைஞர் விழாவில் தன்னை அந்நிகழ்ச்சிக்கு வற்புறுத்தியும் மிரட்டியும்தான் வர வைத்தார்கள் என விழா மேடையிலேயே ஓபனாக கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க:பாரதிராஜாவை வச்சு ஒரு சின்னப் பொய் சொன்னேன்! இப்படி ஆகும்னு நினைக்கல – சுகன்யா சொன்ன சீக்ரெட்

ஆனால் அதன்பின் ஒரு காரணமும் உள்ளதாக இயக்குனர் மற்றும் நடிகரான பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்தின் வான்மதி திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் சிவஷக்தி பாண்டியன். அஜித்தின் வளர்ச்சிக்கு இவரும் ஒரு முக்கிய பங்காற்றியவர். இவர் பொதுவாக படபிடிப்பிலோ சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலோ சற்று கடினமாக நடந்து கொள்வாராம்.

இவர் அஜித்திடம் சென்று கலைஞர் விழாவிற்கு வரும்படி அவரது பாணியில் கூறியிருந்தாராம். மேலும் கண்டிப்பாக வர வேண்டும் எனவும் கட்டளையிட்டாராம். அதனால்தான் அஜித் அந்த நிகழ்ச்சியில் அவ்வாறு தன்னை மிரட்டிதான் வர வைத்தார்கள் என கூறியிருந்தார் என பிரவீன் காந்தி கூறியுள்ளார். மேலும் அஜித்தின் துணிவு படத்திற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெரிய அளவில் உதவியுள்ளதால்  தற்போது நடக்கும் கலைஞர் 100 விழாவில் அஜித் கண்டிப்பாக கலந்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:சிவக்குமார் நடிப்பிற்கு முழுக்கு போட காரணமே அந்த நடிகைதான்!.. இப்படியெல்லாமா பண்ணுவாங்க!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.