Cinema News
டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர்.. அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!
Actress Priyamani: தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கென தனி அங்கீகாரம் உண்டு. அவர்களின் நிறம் மிக முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் அப்படிப்பட்ட மாயையை உடைத்தவர்தான் நடிகை பிரியாமணி. சாதாரண கிராமத்து பெண் தோற்றத்தில் இருக்கும் பிரியாமணி சில காலம் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார்.
இவர் கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல திரைபப்டங்களில் நடித்திருந்தார். இவர் சில காலத்திற்கு பின் திருமண வாழ்க்கையில் நுழைந்தார்.
இதையும் வாசிங்க:கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…
அதன் பின் பெரும்பாலும் இவர் படங்களில் நடிக்கவில்லை. இவர் தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். உயரமான தோற்றம், எடுப்பான கட்டழகு என இவர் இளைஞர்களை கட்டி போட்டவர்.
இவரது தமிழ் சினிமா வாழ்க்கையில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம்தான் பருத்திவீரன். இத்திரைப்படத்தினை இயக்குனர் அமீர் இயக்கியிருந்தார். இப்பட படபிடிப்பில் பிரியாமணிக்கும் அமீருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. நடிக்க அழைத்து வெயிலில் போட்டு வாட்டி வதைப்பதாக இருவருக்கும் இடையே சண்டைகளும் நடந்துள்ளது.
இதையும் வாசிங்க:ஓவரா ஆசைபட்டு கடைசில பாலசந்தரிடம் பல்பு வாங்கிய கமல்… அட இப்படி ஒரு சம்பவம் கூட நடந்துருக்கா?…
அப்போது கூட அமீர் நாங்களும் வெயிலில்தான் வேலை பார்க்கிறோம். உங்களுக்கு மட்டும் என்ன என கேட்டாராம். மேலும் இப்படத்தின் இயக்குனரான அமீர் பிரியாமணியிடம் இப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்திற்கு பிரியாமணியையே டப்பிங் பேசுமாறு சொன்னாராம். பிரியாமணி தனக்கு டப்பிங் பேச வராது என மறுத்துவிட்டாராம். அதற்கு அமீர் உனக்கு தேசிய விருது வேணும்னா நீதான் டப்பிங் பேசனும் என கூறினாராம். பின் பிரியாமணியும் டப்பிங் பேசியுள்ளார்.
அப்போது படத்தின் கடைசியில் டப்பிங் பேச பிரியாமணி வர முடியாது என கூறிவிட்டாராம். அவரது அம்மா வேறு ஒரு நிகழ்ச்சிக்கு தன்னை கமிட் செய்துவிட்டார் எனவும் அதனால் நான் அங்கு செல்ல வேண்டும் எனவும் அமீரிடம் கூறியுள்ளார். இதனால் கடுப்பான அமீர் போறதுனா அப்படியே போய்டுங்க என கூறிவிட்டாராம். பின் வேறொரு பெண்ணை வைத்து அந்த காட்சிக்கு டப்பிங் கொடுக்க வைத்தாராம். ஆனால் அதன்பின் பிரியாமணியை அவர் பார்க்கவே இல்லையாம். 15 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்ச்சியில்தான் சந்தித்தாராம். இப்படத்திற்காக பிரியாமணிக்கு தேசியவிருது வழங்கப்பட்டபோது கூட அவரை சந்திக்கவில்லையாம். இவ்வாறு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அமீர் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:கமல் சொன்ன ஒரு வார்த்தை! அப்பவே ஜெயிச்சுட்டோம்னு தெம்பு வந்தது – அந்தப் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?