Cinema News
இறுதிச்சுற்று கதையை ஆட்டையப்போட்டாரா சுதா கொங்கரா?.. வைரலாகும் பெண் வீராங்கனையின் வீடியோ!..
துளசி எனும் பெண் பாக்ஸரின் கதையை திருடித்தான் சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்தை எடுத்ததாக புதிய பூகம்பம் ஒன்று கிளம்பி உள்ளது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அந்த பெண் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில், அமீர் இயக்கிய ராம் திரைப்படம் குறித்து சுதா கொங்கரா தவறான விமர்சனத்தை முன்வைத்ததாக பேச்சுக்கள் எழுந்த நிலையில், அவர் இயக்குனராக அறிமுகமான இறுதிச்சுற்று திரைப்படம் ஏழை பாக்ஸிங் பெண்ணின் கதையை திருடி எடுக்கப்பட்ட படம் என்கிற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.
இதையும் படிங்க: அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…
தொடர்ந்து பல பிரச்சனைகள் சினிமாவில் ஒன்றன்பின் ஒன்றாக கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில், லேட்டஸ்டாக சுதா கொங்கரா வின் பெயரும் அடிபட்டுள்ளது.
பெண் இயக்குனரான சுதா கொங்கரா தனக்கு கமிஷனர் எல்லாம் தெரியும் என மிரட்டி தன்னிடம் கேட்ட கதையை வைத்து படம் எடுத்து விட்டு தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டார் என்னை பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிவாஜியுடன் நேரடியாக மோதிய 24 ரஜினி படங்கள்… ஜெயித்தது யாருன்னு தெரியுமா?
இயக்குனர் அட்லி மட்டுமே காப்பி சர்ச்சில் சிக்கி வரும் நிலையில், நல்ல இயக்குனர்கள் என மாறு வேஷம் போட்டுக்கொண்டு எல்லாருமே ஏ ஆர் முருகதாஸ் போலவே மற்றவர்களின் கதைகளை ஆட்டையை போட்டு படம் எடுத்து வருபவர்கள் தானா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
நடிகர் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது கிளம்பி இருக்கும் பிரச்சனை அந்தப் படத்திற்கும் சிக்கலை உருவாக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இறுதிச்சுற்று படம் வெளியாகும் முன்னதாகவே டாக்குமென்ட்ரி படமாக துளசியின் கதை 2013ம் ஆண்டு Light Fly, Fly High என்கிற டைட்டிலில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.