Connect with us
Rajni Sivaji

Cinema History

சிவாஜியுடன் நேரடியாக மோதிய 24 ரஜினி படங்கள்… ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் ஒரே நாளில் படங்கள் வெளியாகி உள்ளன. அதுவும் 24 படங்கள்…! யார் அதிகம் ஜெயித்தாங்கன்னு பார்க்கலாமா…

நாம் பிறந்த மண் – காயத்ரி

1976 அக்டோபர்ல சிவாஜி நடித்த சித்ரா பௌர்ணமி ரிலீஸ் ஆகுது. இதே நாளில் ரஜினிகாந்த் முதன்முறையாக ஆன்டி ஹீரோவாக நடித்த மூன்று முடிச்சு படமும் ரிலீஸ். இவற்றில் மூன்று முடிச்சு பிளாக் பஸ்டர் ஹிட். சித்ரா பௌர்ணமி ஆவரேஜ் ஹிட். 1977 அக்டோபர்ல சிவாஜிக்கு நாம் பிறந்த மண் ரிலீஸ். ரஜினிக்கு காயத்ரி படம் ரிலீஸ். இரண்டுமே ஆவரேஜ் என்றாலும் நாம் பிறந்த மண் தான் ஹிட். ஏன்னா அதுல சிவாஜி நடித்ததால் நல்ல வரவேற்பு இருந்தது.

பைலட் பிரேம்நாத் – தாய் மீது சத்தியம்

1977 நவம்பர்ல அண்ணன் ஒரு கோவில் சிவாஜிக்கு ரிலீஸ். ரஜினிக்கு ஆறு புஷ்பங்கள் ரிலீஸ். ரஜினி படம் பிளாப். 100 நாள் ஓடிய சிவாஜி படம் தான் வின்னர். 1978 அக்டோபரில் சிவாஜிக்கு பைலட் பிரேம்நாத் ரிலீஸ். அதே நாளில் ரஜினிக்கு 3 படங்கள் வந்தது. தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம். இவற்றில் தாய் மீது சத்தியம் தான் ஹிட். ஆனால் சிவாஜியோட பைலட் பிரேம்நாத் தமிழகத்தில் 100 நாள்களும், இலங்கையில் 200 நாள்களும் ஓடி வெற்றி பெற்றது.

பட்டாக்கத்தி பைரவன் – அன்னை ஒரு ஆலயம் 

Sivaji, Rajni

Sivaji, Rajni

1979ல் அக்டோபர் மாதம் சிவாஜிக்கு பட்டாக்கத்தி பைரவன் ரிலீஸ். ரஜினிக்கு அன்னை ஒரு ஆலயம் ரிலீஸ். இவற்றில் ரஜினி படம் தான் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. 1980 ஜனவரியில் சிவாஜிக்கு ரிஷிமூலம் படம் ரிலீஸ். ரஜினிக்கு பில்லா படம் ரிலீஸ். சிவாஜி படம் 100 நாள் தான் ஓடியது. ஆனா ரஜினி படம் 250 நாள்களைக் கடந்து ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

1980 நவம்பரில் சிவாஜிக்கு விஸ்வரூபம் படம் ரிலீஸ். ரஜினிக்கு பொல்லாதவன் படம் ரிலீஸ். 2 படங்களுமே 100 நாள் ஓடி வெற்றி பெற்றது. ஆனால் பொல்லாதவனுக்குத் தான் நல்ல வரவேற்பு கிடைச்சது. 1981 மே மாதம் சிவாஜிக்குக் கல்தூண் படம் ரிலீஸ். ரஜினிக்குத் தில்லு முல்லு படம் ரிலீஸ். 2 படங்களுமே 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றன. இதுல ரஜினி படம் 100 நாள்களைக் கடந்தும் ஓடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

சங்கிலி – ரங்கா

1981 அக்டோபர் மாதம் சிவாஜிக்கு கீழ்வானம் சிவக்கும் படம் ரிலீஸ். ரஜினிக்கு ராணுவ வீரன் படம் ரிலீஸ். 50 நாள்கள் தான் ரஜினி படம் ஓடியது. ஆனால் சிவாஜி படம் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.

1982ல் ஏப்ரல் மாதம் சிவாஜிக்கு சங்கிலி படம் ரிலீஸ். ரஜினிக்கு ரங்கா படம் ரிலீஸ். 2 படங்களுமே 100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படங்களில் ரஜினிக்குத் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. 1982 அக்டோபர்ல சிவாஜிக்கு துணை படமும், ரஜினிக்கு மூன்று முகம் படம் ரிலீஸ். இதுல சிவாஜி படம் ஆவரேஜ் ஹிட். ரஜினி படம் வேற லெவல்.

 உருவங்கள் மாறலாம் – பாயும் புலி

1982 நவம்பர்ல சிவாஜிக்கு பரீட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும் படம் ரிலீஸ். அதே நேரம் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த படம் அக்னி சாட்சி. அக்னி சாட்சி 100 நாள்கள் ஓடியது. பரீட்சைக்கு நேரமாச்சு படமும் ஹிட் தான். 1983 ஜனவரியில் சிவாஜிக்கு உருவங்கள் மாறலாம் படமும், ரஜினிக்கு பாயும் புலி படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் சூப்பர் ஹிட். உருவங்கள் மாறலாம் படத்தில் ரஜினியும் நடித்துள்ளார். இந்தப் படமும் 100 நாள்கள் ஓடியது.

வெள்ளை ரோஜா – தங்க மகன்

1983 ஏப்ரல் மாதம் சிவாஜிக்கு இமைகள் ரிலீஸ். ரஜினிக்கு தாய்வீடு ரிலீஸ். சிவாஜிக்கு ஆவரேஜ் ஹிட். ரஜினி படம் 100 நாள் ஓடியது. 1983 நவம்பரில் சிவாஜிக்கு வெள்ளை ரோஜா ரிலீஸ். ரஜினிக்கு தங்க மகன் ரிலீஸ். சிவாஜி படம் 100 நாள்கள் ஓடி சூப்பர்ஹிட். ஆனா தங்கமகன் வெள்ளி விழா படம்.

1984 ஜனவரியில் சிவாஜிக்கு திருப்பம் ரிலீஸ். ரஜினிக்கு நான் மகான் அல்ல ரிலீஸ். இதுல சிவாஜி தான் வின்னர். 1984 அக்டோபரில் ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன் ரிலீஸ். சிவாஜிக்கு வம்ச விளக்கு ரிலீஸ். இதுல ரஜினி படம் பிளாக் பஸ்டர் ஹிட்.

நீதியின் நிழல் – நான் சிகப்பு மனிதன் 

1985 ஏப்ரல் மாதம் சிவாஜிக்கு நீதியின் நிழல் படம் ரிலீஸ். ரஜினிக்கு நான் சிகப்பு மனிதன் ரிலீஸ். சிவாஜிக்கு ஆவரேஜ் ஹிட். ரஜினிக்கு 100 நாள்களைக் கடந்து ஓடி சூப்பர்ஹிட்டானது. 1985 செப்டம்பர்ல சிவாஜிக்கு ராஜரிஷி படம் ரிலீஸ். ரஜினி கெஸ்ட்ரோலில் நடித்த யார் படமும் ரிலீஸ்.

1986 ஜனவரி 10ல் சிவாஜிக்கு சாதனை படம் ரிலீஸ். அதே நாளில் ரஜினி, சத்யராஜ் நடித்த மிஸ்டர் பாரத் ரிலீஸ். இதுல ரஜினி படம் 100 நாள்கள் ஓடியது. சாதனை செம மாஸ். 100 நாள்களையும் தாண்டி ஓடியது. 1986 நவம்பரில் சிவாஜிக்கு லட்சுமி வந்தாச்சு ரிலீஸ். இதே நாளில் ரஜினிக்கு மாவீரன் ரிலீஸ். இதுல ரஜினி படம் பிளாப். சிவாஜி தான் வின்னர்.

முத்துக்கள் மூன்று – வேலைக்காரன்

1987 மார்ச்சில் சிவாஜிக்கு முத்துக்கள் மூன்று படம் ரிலீஸ். ரஜினிக்கு வேலைக்காரன் ரிலீஸ். சிவாஜிக்கு ஆவரேஜ் ஹிட். ரஜினிக்கு 100 நாள்களைக் கடந்து செம மாஸ் ஹிட். 1991 ஜனவரியில் சிவாஜிக்கு ஞானப்பறவை ரிலீஸ். ரஜினிக்கு தர்மதுரை ரிலீஸ். சிவாஜி படம் பிளாப். ரஜினிக்கு 200 நாள்களைக் கடந்து ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

1992 அக்டோபர் மாதம் சிவாஜி, கமல் நடித்த தேவர் மகன் ரிலீஸ். ரஜினிக்கு பாண்டியன் படம் ரிலீஸ். பாண்டியன் 100 நாள்கள் ஓடினாலும் ஹிட் தான். ஆனால் சிவாஜி, கமல் நடித்த தேவர் மகன் படம் பிளாக் பஸ்டர் ஹிட்.

google news
Continue Reading

More in Cinema History

To Top