Connect with us

Cinema News

மனிஷாவுக்கு ரகசியமா போன் போட்ட சீனு ராமசாமி!.. ஒட்டுமொத்த அசிங்கத்தையும் அம்பலப்படுத்திட்டாரு!..

இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு நடிக்கத் தெரியாத நிலையில் தான் அவரை சினிமாவில் இருந்து நீக்கியதாக தெரிவித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மனிஷா யாதவுக்கு ரகசியமாக போன் போட்டு பேசியிருப்பது அம்பலமாகி உள்ளது.

வலைப்பேச்சு பிஸ்மி திரிஷா மற்றும் மன்சூர் அலி கான் விவகாரத்தை பேசும் போது சினிமாவில் பல திருட்டு ஆடுகள் இருப்பதாக கூறி மனிஷாவுக்கு இடம் பொருள் ஏவல் படத்தின் ஷூட்டிங்கின் போது சீனு ராமசாமி செய்த சில்மிஷ வேலைகளை அம்பலப்படுத்தினார்.

இதையும் படிங்க: ஆறடி ஐஸ்க்ரீமா உருக வைக்கும் யாஷிகா ஆனந்த்!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே!..

உடனடியாக மனிஷா யாதவ் 27 டேக்குகள் முதல் நாள் ஷூட்டிங்கிலே வாங்கினார். அவருக்கு நடிக்கவே தெரியவில்லை. அதனால் தான் படத்தில் இருந்து நீக்கினேன் என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஏன் மனிஷாவுக்கு போன் செய்து புதிய படத்தில் நடிக்க சான்ஸ் இருக்கு வரீங்களா? என பல ஆண்டுகளுக்கு பிறகு சீனு ராமசாமி கேட்டார் என்கிற கேள்வியை மனிஷா யாதவ் எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: பார்த்திபனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!.. கார்த்திகை தீப போஸ்ட்.. உடனே மன்னிப்பு கேட்டுட்டாரு?..

இடம், பொருள், ஏவல் படத்தில் சீனு ராமசாமி நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தது. பலமுறை என்னிடம் நெருங்க அவர் நினைத்தும்,  இணங்காமல் நான் மறுத்து வந்தேன். ஆகவே என்னை அந்த படத்தில் இருந்து நீக்கினார் என மனிஷா யாதவ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும், சீனு ராமசாமி தன்னை பற்றி சினிமா உலகில் நடிக்கத் தெரியாத நடிகை என பொய் பிரச்சாரம் செய்து பல பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்து விட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். கூடிய சீக்கிரமே யூடியூப் சேனல்களிலும் மனிஷா யாதவ் வெளிப்படையாக பேசப் போவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top