Cinema News
நிறைவேறாமலே போன எம்.ஜி.ஆரின் கடைசி ஆசை!… இப்படி ஆகிப்போச்சே!..
எம்.ஜி.ஆர் – சிவாஜி என்றால் போட்டி நடிகர்கள், அரசியல்ரீதியாக ஒருவரை தாக்கி மேடைகளில் பேசிக்கொண்டவர்கள் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், சிறுவயது முதலே இருவரும் நல்ல நட்புடன் இருந்தது பலருக்கும் தெரியாது. இருவருமே சிறுவயது முதலே நாடகங்களில் நடித்தவர்கள்.
சிவாஜி மதுரை ஸ்ரீபாலகான சபாவில் வேலை செய்தார். அந்த சபா நடத்தும் நாடகங்களில் நடிப்பார். எம்.ஜி.ஆர் வேறு ஒரு நாடக கம்பெனியில் நடித்து வந்தார். இதுபற்றி சிவாஜியோ ஒருமுறை சொன்னபோது ‘சென்னையில் ஸ்ரீபாலகனா சபா முகாமிட்டிருந்தபோது அருகில்தான் அண்ணன் எம்.ஜி.ஆரின் வீடு இருந்தது’.
இதையும் படிங்க: குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..
காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரின் வீட்டுக்கு போவேன். அவரின் அம்மா சத்யாம்மாள் என்னையும் ஒரு மகன் போலவே நடத்துவார். தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்து எனக்காக அண்ணன் காத்திருப்பார். எனக்கும், அவருக்கும் அம்மா காலை உணவை பரிமாறுவார். நான் செல்ல கொஞ்சம் தாமதமா ஆகி ‘அம்மா எனக்கு பசிக்கிறது’ என எம்.ஜி.ஆர் அண்ணன் சொன்னாலும் ‘இரு.. கணேசன் வரட்டும்’ என அவரின் அம்மா சொல்லுவார். எனக்கு அவரின் அம்மாவும், அவருக்கு என் அம்மாவும் சாப்பாடு போட்டுவிட்டுத்தான் அவர்கள் சாப்பிடுவார்கள்.
எனக்கு வேலை இல்லாத நாட்களில் எம்.ஜி.ஆர் அவர் கையில் இருக்கும் பணத்தை எனக்கு செலவு செய்வார். சினிமா கூட்டிப்போய் வீடு வரும்போது வழியில் சப்பாத்தி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து என்னை வீட்டில் விடுவார். ஒரு தட்டில் சாப்பிட்டு.. ஒரே அறையில் உறங்கி, அண்ணன் – தம்பியாய் பழகிய எங்களின் உறவை இந்த அரசியல் பிரித்துவிட்டது’ என சிவாஜி ஒருமுறை சொன்னார்.
இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..
சினிமாவில் போட்டியே தவிர நிஜவாழ்வில் சிவாஜி கணேசன் மீது எப்போதும் பேரன்பு கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். சிவாஜி வீட்டில் கமலாம்பாள் செய்யும் விரால் மீன் குழம்பு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டால் குழந்தை போல வீடு தேடிவந்து சிவாஜியிடம் சண்டை போடுவாராம்.
1984ம் வருடம் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது அவர் சிவாஜியை சந்திக்க விரும்பினார். அதேபோல், சிகிச்சை முடிந்து சென்னை வந்த பின்னரும் சிவாஜியை தனிப்பட்டமுறையில் சந்தித்து பேச எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டார். ஆனால், அது கடைசிவரை நிறைவேறவே இல்லை என்பதுதான் இருவரின் உறவிலும் நடந்த பெரும் சோகம்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..