Cinema History
பொறக்கும் போதே சலங்கை கட்டி பொறந்தவங்க! அவங்களோட ஆடுறதா? எம்ஜிஆர் சொன்ன நடிகை யாரு தெரியுமா?
Actor MGR: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருந்தார். ஒரு நடிகரால் எப்படி அரசியலில் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்தவர் நம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.
நடிகராக சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான எம்ஜிஆர் ஆரம்பத்தில் துணை நடிகராகத்தான் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகே மக்கள் போற்றும் ஒரு மகத்தான கலைஞனாக உருவெடுத்தார். அவரின் புகழை ஓவர்டேக் செய்ய அவர் ஒருவரைத்தவிற யாராலும் முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: காதலுக்காக ஏங்கும் நாயகிகளின் கதையில் ஹீரோ செய்த புதுமை!.. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அழகன்
தன் படங்களின் மூலம் மக்களுக்கு என்ன மாதிரியான கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தார் எம்ஜிஆர். அவர் நடித்து பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது குடியிருந்த கோயில் திரைப்படம்.
அந்தப் படத்தில் அமைந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றித்தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தப் படத்தில் ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ என்ற புகழ்பெற்ற பாடல் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: ரஜினி ஹீரோவாக நடித்து கைவிடப்பட்ட திரைப்படம்..! இயக்குனர் யார் தெரியுமா? அப்புறம் ஏன் மிஸ் ஆச்சு..?
அந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு ஃபங்ஷன் மூடுக்கே நம்மை கொண்டு சென்று விடும். அந்தப் பாட்டில் எம்ஜிஆருடன் சேர்ந்து எல்.விஜயலட்சுமி பங்க்ரா என்ற நடனத்தை ஆடியிருப்பார். முதலில் இதைப் பற்றி எம்ஜிஆரிடம் சொல்லும் போது சலங்கை கட்டி பிறந்தவர் எல்.விஜயலட்சுமி. அவருடன் நான் ஆடுவதா? என மறுத்தாராம்.
அதன் பிறகு அந்தப் படத்தின் இயக்குனரான கே.சங்கர் கேட்டுக் கொண்டதன் பெயரில் எம்ஜிஆர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் இந்த நடனத்துக்காக மூன்று நாள்கள் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் எம்ஜிஆர். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை முழுவதும் படமாக்கிய பிறகு நான் பார்த்து ஓகே சொன்னப் பிறகுதான் படத்தில் வைக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டாராம்.
இதையும படிங்க: இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..
இந்த நடனத்தை ஆடும் போது எம்ஜிஆருக்கு 55 வயது இருக்குமாம். 55 வயதில் எம்ஜிஆர் இப்படி ஆடுவதை பார்த்த எல்.விஜயலட்சுமி மெய்சிலிர்த்து நின்றாராம்.