ஞானவேல் அடக்கி வாசி!.. ஒழுங்கா மன்னிப்பு கேளு!. அமீருக்கு ஆதரவா களமிறங்கிய பாரதிராஜா…

Published on: November 28, 2023
ameer
---Advertisement---

பருத்திவீரன் படம் தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மாறி மாறி கொடுத்துவரும் பேட்டிகள் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், திரையுலகிலும் புயலை கிளப்பி வருகிறது. கார்த்தியை ஹீரோவாக வைத்து அமீர் உருவாக்கிய படம் பருத்திவீரன்.

படம் துவங்கி சில நாட்கள் ஞானவேல் ராஜா தயாரிப்பு செலவை பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் இனிமேல் செலவு செய்ய முடியாது என அவரும், சூர்யாவும் கைவிரித்துவிட அமீரே தனது நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களிலும் கடன் வாங்கி இந்த படத்தை எடுத்து முடித்தார்.

இதையும் படிங்க: கவுண்டமணிக்கும் பாரதிராஜாவுக்கும் இப்படி ஒரு பிரச்சினையா? அதிகமாக நடிக்காததற்கு இதுதான் காரணமா?

ஆனால், படம் நன்றாக வந்ததால் அமீரிடமிருந்து ஞானவேல் ராஜா மற்றும் சூர்யா அண்ட் கோ படத்தை எழுதி வாங்கி கொண்டார்கள். மேலும் அமீர் செலவு செய்த பணத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக அமீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 17 வருடங்களாக இந்த வழக்கு நடந்து வருகிறது.

ஆனால், அமீருக்கு வாய்ப்பு கொடுத்ததே நான்தான். இந்த படத்தில் அமீர் நிறைய பொய்க்கணக்கு எழுதி கொடுத்தார். திருடினார் என்றெல்லாம் அமீரை விமர்சித்து பேட்டி கொடுத்தார். இதையடுத்து சசிக்குமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, பொன் வண்ணன் உள்ளிட்ட பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதையும் படிங்க: பாரதிராஜா கூப்பிட்டதும் செருப்பை தூக்கிட்டு வந்த நடிகர்… யாருன்னு தெரியுமா?…

இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஒரு படைப்பாளியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதை போல நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். உங்களை தயாரிப்பாளர் ஆக்கியதே அமீர்தான். பருத்திவீரன் படத்திற்கு முன்பே அவர் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒரு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

உங்கள் பேச்சு படைப்பாளியை அவமதிப்பது போல் இருக்கிறது. உங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என நம்புகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

paruthiveeran

இதையும் படிங்க: உங்கள மாதிரி அமீர் ஒண்ணும் பிட்டு படம் எடுக்கல!.. ஞானவேல் ராஜாவை தாக்கிய ப்ளூ சட்டை மாறன்!..