Connect with us
bharathiraja

Cinema History

பாரதிராஜா கூப்பிட்டதும் செருப்பை தூக்கிட்டு வந்த நடிகர்… யாருன்னு தெரியுமா?…

Director bharathiraja: பாரதிராஜா தமிழ் சினிமாவின்  இயக்குனர்களில் ஒருவர். சினிமாவில் 70ஸ்,80ஸ்களில் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையில் இயக்கப்பட்ட இவரின் திரைப்படங்கள் அன்றைய கால மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். பின் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் என இவர் இயக்கிய படங்கள் ஏராளம். இவரின் திரைப்படங்களை இன்று வரை ரசிப்பவர்களும் உண்டு.

இதையும் வாசிங்க:இந்த தடவ அஜித் வந்தே ஆகணும்!.. வலைவிரிக்கும் திரையுலகம்!. சிக்குவாரா ஏ.கே!..

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியலை இயக்கியுள்ளார். மேலும் இவரின் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன. இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார்.

நம்ம வீட்டு பிள்ளை, வாத்தி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் வெளிக்காட்டியுள்ளார். இவர் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் மண்வாசனை. இப்படத்தில் நடிகர் பாண்டியன் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ரேவதியும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்க: ஹீரோன்னா அழகாத்தான் இருக்கணுமா?!. டிரெண்டையே மாற்றி தெறிக்கவிட்ட டி.ராஜேந்தர் – கே.பாக்கியராஜ்…

இப்படத்திற்கு இயக்குனர் கடைசி தருணம் வரையிலும் கதாநாயகனை தேர்வு செய்யவில்லையாம். பின் ஒரு நாள் படபிடிப்பில் நடிகர் பாண்டியன் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு பின் சூரிய வெளிச்சம் பட்டதாம்.

உடனே அங்கிருந்த இயக்குனர் பாரதிராஜா அவரை அழைத்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாண்டியன் தன் கையில் அவர் அணிந்திருந்த செருப்பை தூக்கி கொண்டு ஓடி வந்தாராம். இதிலேயே அவரை பாரதிராஜாவுக்கு பிடித்துப்போனதாம். இவ்வாறுதான் அவர் இப்படத்திற்கு கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டாராம்.

இதையும் வாசிங்க:அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..

google news
Continue Reading

More in Cinema History

To Top