கதறி அழுத உதவியாளர்… அதை பார்த்து சிரிச்ச எம்.ஜி.ஆர்!.. என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?…

Published on: November 29, 2023
actor mgr
---Advertisement---

MGR: தமிழ் சினிமாவில் தனது படங்களின் மூலமும் தனது குணத்தின் மூலமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம்ஜிஆர். திரையுலகிலும் மட்டுமில்லமல்  நிஜ வாழ்வில் இவருக்கென மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அதிகம்.

நடிகரை தாண்டி இவர் ஒரு சிறந்த மனிதரும் கூட. ஏழை எளிய மக்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வதில் வல்லவர். இவரின் குணத்தினாலேயே இவர் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையும் வாசிங்க:ஸ்ரீதர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ரிமேக் செய்யும் எண்ணத்தை விட்ட மனோபாலா

ஆனால் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவர் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ராஜகுமாரி திரைப்படத்தின் மூலமாகவே இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். பின் ரிக்‌ஷாகாரன், படகோட்டி, மலைகள்ளன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திம் அனைத்து இயக்குனர்களும் விரும்பும் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். இவரின் படங்களின் மக்களின் நலனுக்கான பல விஷயங்களும் இருக்கும்.

எம்ஜிஆர் பிக்சர்ஸில் எம்ஜிஆருக்கு உதவியாளராக பணியாற்றியவர் ரவீந்தர். ஒரு முறை இவர்கள் இருவரும் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் இருந்து காரில் கிளம்பியபோது எம்ஜிஆர் ரவீந்தரை பார்த்து ராமவரம் தோட்டத்தில் மூன்று பேர் அமர்ந்திருந்ததை கவனித்தீர்களா? என கேட்டாராம்.

இதையும் வாசிங்க:பொறக்கும் போதே சலங்கை கட்டி பொறந்தவங்க! அவங்களோட ஆடுறதா? எம்ஜிஆர் சொன்ன நடிகை யாரு தெரியுமா?

அப்போது அவரும் ‘ஆமாம் அண்ணே கவனித்தேன்..ஏன் என தெரியவில்லை?’… என கூறினாராம். அதற்கு எம்ஜிஆர் ‘வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர்.. தேவையில்லா புகாரை சில கொடுத்துள்ளனர். அதனால் ஜப்தி செய்ய வந்துள்ளனர்’ என கூறிவிட்டு புன்னகை செய்தாராம். ஆனால் ரவீந்தருக்கோ சொல்ல முடியாத அளவு அழுகை வந்ததாம்.

அதை கண்ட எம்ஜிஆர் வருத்தபட வேண்டாம்.. நாம் பிறக்கும்போது எதை கொண்டு வந்தோம்… அதனால் ஒன்றும் பிரச்சினை இல்லை.. நான் சத்யா ஸ்டுடியோவில் தங்கி கொள்வேன் என கூறியிருக்கிறார். பல பேரின் வீடு ஜப்தி ஆகும்போது அதை மீட்டு கொடுத்த மக்கள் திலகத்துக்கே இன்று இந்த நிலைமை வந்துவிட்டதை எண்ணி ரவீந்தர் மிகவும் அழுதுள்ளார்.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் சலிக்க சலிக்க பார்த்த சிவாஜி படம் அதுதான்!.. அவ்வளவு தீவிர ரசிகரா?!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.