Cinema News
பருத்திவீரன் பட்ஜெட் என்ன?!.. அமீர் செலவு செய்தது எவ்வளவு?.. யார் தயாரிப்பாளர்?..
கடந்த சில நாட்களாகவே திரையுலகிலும், சமூகவலைத்தளங்களில் ரசிகர்களும் அதிகம் விவாதிக்கும் விசயமாக பருத்தி வீர்ன் படம் இருக்கிறது. சூர்யாவின் சகோதரர் கார்த்தி அறிமுகமான இந்த படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படங்களின் பட்டியிலில் பருத்திவீரனுக்கும் இடம் உண்டு.
இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்திற்கு பின் அமீரின் படங்களுக்கு ரசிகர்களே உருவானார்கள். ஆனால், இந்த படத்தில் பாதி செலவை நான் செய்து எடுத்தேன். ஆனால், என்னிடமிருந்து படத்தை எழுதி வாங்கி ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளர் என சொல்லி படத்தை ரிலீஸ் செய்தனர். நான் செய்த செலவுகளையும் எனக்கு கொடுக்கவில்லை. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து 17 வருடங்களாக வழக்கு நடந்து வருகிறது என அமீர் சொல்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை… தொடர் சிகிச்சையில் கேப்டன்.. மருத்துவமனை வெளியிட்ட ஷாக் அறிக்கை..!
ஆனால், அமீர் சொல்வது பொய். அவருக்கு எல்லா பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. அவர் பொய் கணக்கு எழுதி கொடுத்தார். என் காசை திருடினார்… என்றெல்லாம் ஞானவேல் ராஜா பேச திரையுலகில் பல இயக்குனர்கள் பொங்க துவங்கிவிட்டனர். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு அமீர் அண்ணனுக்கு பணம் கொடுத்தது நான்தான். அதை ஞானவேல் ராஜா திருப்பி கொடுக்கவில்லை என சசிக்குமார் சொன்னார்.
மேலும், பருத்திவீரன் படத்தில் வேலை செய்த இயக்குனர் சமுத்திரக்கனி ‘அமீர் அண்ணன் பல பேரிடம் கடன் வாங்கித்தான் பருத்திவீரன் படத்தை எடுத்து முடித்தார். அவர் சொல்லி அனுப்பி நானே பலரிடமும் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி வந்து கொடுத்தேன் என சொன்னார்.
இதையும் படிங்க: எல்லாம் வதந்தி! எதையும் நம்பாதீங்க – அவரே சொல்லிட்டாரு! ஏகே 63 பற்றிய புதிய அப்டேட்
மேலும், அப்படத்தில் நடித்த பொன்வண்ணன் மற்றும் இயக்குனர் பாரதிராஜா, கரு பழனியப்பன் ஆகியோரும் ஞானவேல் ராஜா பேசியதை கண்டித்தனர். இதைத்தொடர்ந்து ‘தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல் ராஜா’ கூறியுள்ளார். படம் துவங்கியபோது ஞானவேல் ராஜாதான் தயாரிப்பாளராக இருந்தார். ரூ.2.15 கோடி அவர் செலவு செய்தார். அதோடு சரி., பட்ஜெட் அதிகமாகிவிட்டதாக கூறி அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார்.
அதன்பின்னர் அமீர் ரூ.1.65 கோடி கடன் வாங்கி இந்த படத்தை முடித்துள்ளார். ஆனால், படம் நன்றாக இருந்ததால் சூர்யா குடும்பம் அவரிடமிருந்து படத்தை எழுதி வாங்கி ஞானவேல் ராஜா பெயரில் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டனர் என சொல்லப்படுகிறது. அதோடு, அமீர் செலவு செய்த அந்த ரூ.1.65 கோடியையும் திருப்பி கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இதையும் படிங்க: அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..