Cinema News
மருத்துவமனையில் விஜயகாந்த்.. முதல் ஆளாக களத்தில் இறங்கிய பார்த்திபன்… என்ன செய்தார் தெரியுமா?
Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் என்றால் உடனே பதில் வரும் விஜயகாந்த் தான் என்று. அவர் இன்று மருத்துவமனையில் மோசமான கட்டத்தில் இருப்பதாக நேற்று மருத்துவமனை அறிக்கை வந்து இருக்கும் நிலையில் முதல் ஆளாக பார்த்திபன் ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார்.
தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து ஆக்ஷன் படங்களில் பட்டையை கிளப்பி வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் அப்போது வெளியான் எல்லா படங்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. நடிப்பில் மட்டும் அல்லாமல் தன்னுடைய படக்குழுக்கு தன்னால் முடிந்த உதவியை எப்போதுமே செய்து வருவது அவர் வழக்கம்.
இதையும் படிங்க: அவ்வளவு தான் எல்லாம் சும்மாவா? இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்..?
இதனை தொடர்ந்து அவரின் ஹிட் படங்கள் ஒரு பக்கம் அதிகரிக்க தன்னுடைய கவனத்தினை அரசியலில் மாற்றினார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி ஒரு சில தேர்தலில் போட்டியிட்டு ஒரு கட்டத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றது மக்களுக்கே ஆச்சரியத்தினை கொடுத்தது.
ஆனால் திடீரென அவர் உடல்நிலை பிரச்னை ஏற்பட மொத்தமாக முடங்கினார். குரல் இழந்தார். உடல் மெலிந்தது. பொதுவெளியில் அதிகம் வருவதை தவிர்த்தார். நல்ல நாளில் குடும்பத்தினரால் வெளியிடப்படும் புகைப்படம் ஒவ்வொரு முறையும் அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்து வந்தது.
இதையும் படிங்க: இதுதான் லாஸ்ட் ஸ்டேஜ்! கேப்டன் சிகிச்சை குறித்து விளக்கமளித்த மருத்துவர் – இப்படியெல்லாம் இருக்கா?
அதில், ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என போற்றபடும் திரு விஜயகாந்த் துணைவியாருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். மருத்துவமனையிலிருந்து வெளியான அறிக்கை அதிர்ச்சியாக இருந்தது. எனக்குத் தெரிந்து குறை சொல்ல ஏதுமற்ற உள்ளமது. குறைவின்றி நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என அந்த ஆடியோவையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என போற்றபடுபவர் திரு விஜயகாந்த்.நேற்று அவரது துணைவியாருக்கு குருஞ்செய்தி அனுப்பினேன்.மருத்துவமனையிலிருந்து இன்று ஒரு அறிக்கை>அதிர்ச்சியாக இருந்தது.எனக்குத் தெரிந்து குறை சொல்ல ஏதுமற்ற உள்ளமது. குறைவின்றி நல்ல ஆரோக்யத்துடன் வீடு திரும்ப வேண்டும pic.twitter.com/GCmXYbGpwN
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 29, 2023