Connect with us
actor jaishankar

Cinema News

சோவிற்கு வந்த மிரட்டல்… எல்லாத்துக்கும் காரணம் ஜெய்ஷங்கர்தான்!.. நடந்தது இதுதான்..

Actor jaishankar: சில நடிகர்கள் என்னதான் குறைந்த அளவு படங்களிலேயே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பெற்றிருப்பர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஜெய்ஷங்கர். இவர் தனது கல்லூரி காலம் முதலே நாடகங்களில் நடித்து வந்தவர்.

சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவிற்குள் நுழைந்தார். மேலும் இவர் சிவாஜியின் தீவிர ரசிகரும் கூட. சிவாஜியின் பராசக்தி படத்தை பல முறை பார்த்துள்ளாராம். மேலும்  அவரது படத்தில் உள்ள வசனங்கள் அனைத்தையும் மனப்பாடமாக பேசி காட்டுவாராம்.

இதையும் வாசிங்க:அந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஏமாந்துபோன ரஜினி!.. வடை போச்சே!..

அந்த அளவுக்கு இவர் சிவாஜியின் மீது பற்றுள்ளவர். இவர் இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கெளரி கல்யாணம், அவசர கல்யாணம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இக்கால நடிகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது கல்லூரியில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தின் அடிப்படையில் சோ நடத்தி வந்த நாடக குழுவில் சேர்ந்தார். அப்போது அவரது நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவருக்கு பதிலாக ஜெய்ஷங்கரை நடிக்க வைத்துள்ளார் சோ.

இதையும் வாசிங்க:விசித்ரா கையால அவார்ட் வாங்குறப்போ வெட்கமா இருந்துச்சு… பிரபல சீரியல் நடிகை சொன்ன ஷாக் தகவல்…

இது ஏற்கனவே கதாநாயகனாய் நடித்தவருக்கு கோபத்தை கிளப்ப அவர் சோவிடம் சென்று ‘என் இடத்தில் அனுபவமே இல்லாத அவரை எதற்காக நடிக்க வைத்தீர்கள். இப்போது அவர் நடித்து முடித்து வரும்போது அவர் நன்றாக நடித்தார் என சொல்ல கூடாது. அதற்கு பதிலாக நன்றாக நடிக்கவில்லை என்றுதான் கூர வேண்டும். அப்படி நீங்கள் அவர் நன்றாக நடித்தார் என கூறினால் இனி  உங்கள் நாடக சபையில் நான் நடிக்கவே மாட்டேன்’ என கூறிவிட்டாராம்.

பின் ஜெய்ஷங்கரும் வந்துள்ளார். அப்போது சோ அவரை பார்த்து ‘ஒத்திகையே பார்க்காமல் இவ்வளவு அழகாக நடித்துள்ளாயே’ என பாரட்டினாராம். மேலும் அந்த நாடகத்தில் தொடர்ந்து ஜெய்ஷங்கரையே கதாநாயகனாக நடிக்க வைத்தாராம்.

இதையும் வாசிங்க:காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?… ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த எஸ்.வி.சேகர்…

author avatar
amutha raja
Continue Reading

More in Cinema News

To Top