Connect with us

Cinema History

அந்த நடிகையுடன் ஜோடி போட ஆசைப்பட்டு ஏமாந்துபோன ரஜினி!.. வடை போச்சே!..

Rajinikanth: தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க ஆசைப்படும் நடிகைகள் தான் இங்கு அதிகம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை தட்டிவிட்ட எந்த நடிகை தான் நினைப்பார். ஆனால் ஒரு நடிகை சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பையே வேண்டாம் எனச் சொல்லிய நிகழ்வும் நடந்து இருக்கிறது.

கோலிவுட்டில் அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிக்க வந்தவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தனி அடையாளம் காட்ட அவருக்கென்ற ஒரு கூட்டம் உருவானது. வில்லனாகி பின்னர் ஹீரோவாகி இன்று சூப்பர்ஸ்டாராகவும் உச்சம் அடைந்து விட்டார். அவர் படத்தில் ஒரு சின்ன ரோல் கிடைக்காதா என ஏங்குபவர்கள் தான் அதிகம்.

இதையும் படிங்க: திடீரென அழைத்த விஜய்… திக்குமுக்காடி போன அட்லீ!.. அவரே அத எதிர்பார்க்கலயாம்!..

ஆனால் ரஜினிகாந்துக்கு ஒரு நடிகையுடன் நடிக்க அத்தனை ஆசை இருந்ததாம். தன்னுடைய மிகப்பெரிய படங்களில் அந்த நடிகையின் கால்ஷீட்டை கேட்டு அவர் மறுத்த விஷயம் தான் நடந்து இருக்கிறது. இதலாம் பொய்யா இருக்கும் என நினைப்பவர்களுக்கு இந்த விஷயத்தினை ஓபன் செய்து இருப்பதே ரஜினிகாந்த் தான்.

அவர் பொதுமேடையில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயை நாடினோம். அந்த அழகு அந்த திமிரு நீலாம்பரியாக நடித்து இருந்தால் எப்படி இருக்கும்? அதில் ஐஸ்வர்யா நடிக்கவில்லை. பின்னர் பாபா படத்தில் நடிக்க கேட்டோம். அவங்க இல்லனு சொன்னதும் கேரக்டரையே கொஞ்சம் மாத்தினோம்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு விட்ட பொய்..! எக்ஸில் கடுப்பாகி ட்வீட் போட்ட ஹரிஷ் கல்யாண்… தேவையா இந்த அசிங்கம்..!

சந்திரமுகியில் ஐஸ்வர்யா ராய் அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என நினைச்சு பாருங்க. அதிலும் நோ சொன்னார். இப்போ சிவாஜி படத்துக்கு ஐஸ்வர்யா ராயை  கேட்டு இருக்கோம். கிடைச்சா எல்லாருக்குமே நல்லது. சந்திரமுகிலயே கிடைக்கல. ஆனா அத விட பெரிய படத்துல நடக்கும் எனப் பேசி இருப்பார்.

ரஜினியின் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படி ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படங்களுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் கடைசியாக எந்திரன் படத்தில் நடிக்க ஓகே சொல்லினார். ஆனால் அதுவும் சூப்பர்ஸ்டாருக்காக இல்லாமல் இயக்குனர் ஷங்கருக்காக தான் எனவும் கூறப்படுகிறது.

ரஜினி பேசிய அந்த வீடியோவைக் காண:  https://fb.watch/oE1790WX0g/

google news
Continue Reading

More in Cinema History

To Top