
Cinema News
என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…
Published on
By
மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தவர் விஜயகாந்த். பல இடங்களில் வாய்ப்பு தேடி, பல அவமானங்களை சந்தித்திருக்கிறார். விஜயகாந்த் கருப்பு நிறம் என்பதால் அதையே காரணமாக காட்டி ‘உனக்கெல்லாம் ஹீரோ ஆகணும்னு’ ஆசையா?.. என பல தயாரிப்பாளர் அவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனாலும், நம்பிக்கையுடன் போராடி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். ஹீரோவாக நடிக்க துவங்கி வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். விஜயகாந்த் சினிமாவில் நுழையும்போது கமலும், ரஜினியும் பெரிய ஹீரோக்களாக இருந்தார்கள். ஆனால், விஜயகாந்த் படிப்படியாக முன்னேற்றி அவர்களுக்கே போட்டியாக வந்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்.. முதல் ஆளாக களத்தில் இறங்கிய பார்த்திபன்… என்ன செய்தார் தெரியுமா?
கிராமபுறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கு ரசிகர்கள் அதிகம். தமிழகத்தின் எந்த குக்கிராமத்திற்கு சென்றாலும் அங்கு விஜயகாந்த் ரசிகர் மன்ற போர்டு இருக்கும். அந்த அளவுக்கு மக்களிடம் பிரபலமானார் விஜயகாந்த். 90களில் முன்னணி நடிகர்களாக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.
ஊமை விழிகள், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், உழவன் மகன், செந்தூர பூவே என அவர் நடித்த திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்ததோடு வசூலையும் வாரிக்குவித்தது. அதன்பின் அவர் அரசியலுக்கும் வந்து தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.
இதையும் படிங்க: மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..
ஒருமுறை ஊடகம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ‘நான் சினிமாவில் நடிக்க துவங்கியபோது என்னுடன் நடிக்க பல நடிகைகளும் மறுத்தனர். அந்த வகையில் ராதிகா, அம்பிகா இருவரும் என்னுடன் பல படங்களில் நடித்தனர். அதேபோல், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், இராம நாராயணன் இருவரும் நல்ல கதைகள் மூலம் என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர். இவர்கள் என் சினிமா வாழ்வில் முக்கியமானவர்கள்’ என பேசியிருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்தான் விஜயகாந்தை சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் வெற்றியே விஜயகாந்துக்கு வாய்ப்புகளை பெற்று தந்தது. அவரின் இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார். அதேபோல், விஜயகாந்தை வைத்து இராம நாராயணன் இயக்கிய சிவப்பு மல்லி உள்ளிட்ட படங்களும் விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...