Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்த படியாக ஒரு நடிகரை மக்கள் கொண்டாடினார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். கருப்பு எம்ஜிஆர் என்றே ஒரு கட்டத்தில் அழைக்க தொடங்கினார்கள். அந்தளவுக்கு எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் ஏழை எளியவர்களிடமும் சாதாரண மக்களிடமும் மக்களோடு மக்களாக பழகி வந்தவர் நம்ம கேப்டன்.
ஆனால் இப்போது அவர் உடல்நிலையை கண்கூட பார்க்க முடியவில்லை. கர்ஜிக்கும் குரலோடு, வீர நடையுடன் திரையில் பார்த்த விஜயகாந்தை இப்படி பார்க்க தைரியம் இல்லாமல் இருப்பவர்கள் ஏராளம். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் விஜயகாந்த் குறித்தும் அவரை சுற்றி என்னென்ன விஷயங்கள் நடந்தன என்பன குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்தார்.
இதையும் படிங்க: கொலைவெறி ஆகுது!.. கார்த்தி தாடி வச்சதால கிடச்ச வாய்ப்பு!.. போட்டு பொளக்கும் கஞ்சா கருப்பு..
கேப்டனின் உடலில் பின்னடைவு ஏற்பட்டதில் இருந்தே பிரேமலதாவும் அவரின் தம்பியான சுதீஷுமுமே பொது இடங்களில் அதிகமாக தெரிய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் இந்தளவுக்கு ஆனதற்கு காரணமே சுதீஷ்தான் என்றும் வெளியில் பேச ஆரம்பித்தனர்.
விஜயகாந்த் அரசியலில் கால்பதித்ததும் எம்.எல்.ஏ சீட், கட்சியில் மிக முக்கிய பொறுப்பு என கவுன்சில், நகராட்சி, மாநகராட்சி என பல பேரிடம் சுதீஷ் பணத்தை கரந்தாராம். அதனால் அவர் சேர்த்த தொகை 100 கோடிக்கும் அதிகமாக இருக்குமாம். அதை வைத்து பெரிய பில்டர்ஸ் ஆகிவிடலாம் என நினைத்த சுதீஷை ஒரு மாரவாடி ஏமாற்றி விட்டு சென்று விட்டதாகவும் அதிலிருந்தே சுதீஷின் உடல்நிலையும் சரியில்லாமல் போய்விட்டது எனவும் அதனால்தான் சமீபகாலமாக அவர் வெளியில் தெரிவதில்லை என்றும் பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: சார்லி சாப்ளின் வேஷம்தான் உனக்கு சரி… அப்படி சொன்ன பாலசந்தரையே பயப்படவச்ச நாகேஷ்…
அதன் பிறகு விஜயகாந்த் இருந்த இடத்தில் பெரிய பையனும் பிரேமலதாவும் உருவெடுக்க மறுபடியும் சுதீஷால் ஒன்றும் செய்யமுடியவில்லை. விஜயகாந்திற்கு இருக்கும் அந்த மெடிக்கல் காலேஜின் சொத்து மதிப்பே 2000 கோடி வரை இருக்குமாம். அதே போல் 10 சொத்து இருப்பதாகவும் கோவையில் ஒரு சொத்து, வேறு சில கல்லூரிகள் என அசைக்க முடியாத சொத்துக்கள் இருப்பதாகவும் பாண்டியன் கூறினார்.
கோயம்பேடில் இருக்கும் கல்யாண மண்டபத்திற்கு நிலம் கொடுத்த ஒரு பெண்ணுக்கு உரிய பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் சொன்னார் பாண்டியன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த பிரேமலதா கோடிகளில் புரள ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு கொடுக்க மனம் இல்லாமல் மாறி விட்டார் என்றும் பாண்டியன் கூறினார்.
இதையும் படிங்க: ரஜினி சொன்னாருங்கிறதுக்காக நடிக்க முடியாது! நல்லதுக்கு காலம் இல்லப்பா – வாய்ப்பு கொடுத்தது தப்பா?
அதுமட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகளிடமும் பல லட்சங்களை வாங்கி அதையும் சொத்தாக மாற்றிவிட்டதாகவும் அதனாலேயே பல பேர் கட்சியிலிருந்து ஓடிவிட்டதாகவும் நடிகர் அருண் பாண்டியன் கேப்டனை விட்டு சென்றதுக்கு இதுதான் காரணம் என்றும் பாண்டியன் கூறினார். அவரிடம் அவ்ளோ கொடு, இவ்ளோ கொடு என பணத்தை கேட்டு கேட்டு வாங்கியதாகவும் அதனால்தான் அவர் இதைவிட்டு போனார் என்று பாண்டியன் கூறுகிறார். ஆக மொத்தம் பிரேமலதாவை பொறுத்தவரைக்கும் விஜயகாந்த் ஒரு ஏடிஎம் மெஷின் என்று கூறினார்.
