
Cinema News
விஜயகாந்திடம் ஜானகி அம்மாள் காட்டிய அன்பு!.. கேப்டனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் ஹைலைட்!..
Published on
By
vijayakanth: எம்.ஜி.ஆர், ரஜினி ஆகியோரை பார்த்து சினிமாவுக்கு வந்தாலும் அவர்களுடன் அதிகம் நெருங்கி பழாகதவர் விஜயகாந்த். பாக்கியாராஜ், சத்தியராஜ் போன்ற நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகி உரிமை எடுத்துக்கொண்டனர். ஆனால், விஜயகாந்த் அதை செய்யவில்லை. ஏனோ, எம்.ஜி.ஆரிடமிருந்து விஜயகாந்த தள்ளியே இருந்தார்.
ஆனால், விஜயகாந்தின் வளர்ச்சியை எம்.ஜி.ஆர் அப்போதே கணித்தார். உழவன் மகன் படம் ரிலீஸுக்கு முதல் நாள் இரவு எம்.ஜி.ஆர் காரில் வந்தபோது விஜயகாந்தின் ரசிகர்கள் தெருக்களில் நின்று கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர் காரை நிறுத்தி அவர்களிடம் விசாரித்த போது ‘தலைவர் படம் நாளைக்கு ரிலீஸ்.. அதனால் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருக்கிறோம்’ என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா படங்களை காலி செய்த விஜயகாந்த்!.. கலெக்ஷன் கிங்காக இருந்த கேப்டன்…
‘சாப்பிட்டுவிட்டு வேலை செய்யுங்க’ என எம்.ஜி.ஆர் சொல்ல, வேலையை முடித்துவிட்டு சாப்பிடுவோம் என விஜயகாந்த ரசிகர்கள் அவரிடம் சொன்னார்கள். அதன்பின் டிரைவரிடம் ‘எனக்கு இருப்பது போலவே விஜயகாந்துக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பின்னாளில் அரசியலிலும் அவர் நல்ல இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கு’ என சொன்னாராம் எம்.ஜி.ஆர். அவர் சொன்னது பின்னாளில் அப்படியே நடந்தது.
எம்.ஜி.ஆரை போலவே ஆக்ஷன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பின் எங்கேனும் தப்பு நடந்தால் விஜயகாந்த் தட்டி கேட்பார் என மக்கள் நினைத்தனர். விஜயகாந்தின் நிஜ சுபாவமும் அதுதான். அதிக ரசிகர்களை உருவாக்கியது, ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ரசிகர் மன்றங்களை உருவாக்கியது, அரசியல் கட்சி துவங்கியது என எம்.ஜி.ஆரைத்தான் விஜயகாந்த் பின்பற்றினார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் விஜயகாந்த்!.. முந்திக் கொண்ட சூர்யா.. இன்னும் விஜய்க்கு மனசு வரலையேப்பா?..
அதேநேரம், கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கி பழகியதால், இது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது என்பதால் அவரிடம் விஜயகாந்த் செல்லவில்லை என்பதுதான் நிஜம். அதேநேரம், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அடிக்கடி இராமபுரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரின் துணைவி ஜானகி அம்மாளை நலம் விசாரித்துவிட்டு வருவார். ஜானகி அம்மாவுக்கும் விஜயகாந்த் மீது நல்ல அன்பும் உண்டு.
அதோடு, விஜயகாந்த் தேமுதிக கட்சியை துவங்கியபோது எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை விஜயகாந்துக்கு ஜானகி கொடுத்தார். அந்த வேனில்தான் விஜயகாந்த் மதுரை மாநாட்டுக்கு சென்று கட்சியை அறித்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்திலும் எம்.ஜி.ஆரின் காரை அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...