கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

Published on: December 5, 2023
vijay
---Advertisement---

Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தனது குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறார் என்றாலும் இவர் கதாநாயகனாய் அறிமுகமாகிய திரைப்படம் நாளைய தீர்ப்பு. ஆரம்ப காலத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு பெரிதளவில் வெற்றிப்படங்களாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பின் தனது தந்தையின் முயற்சியினாலேயே இவர் சினிமாவில் ஓரளவு ஜொலிக்க ஆரம்பித்தார். பின் இவரது காதலுக்கு மரியாதை திரைப்படம்தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்கு பின் விஜய் முன்னணி கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.

இதையும் வாசிங்க:நான் ஒன்னும் உத்தமிலாம் இல்ல!. இப்படி ஓப்பனா போட்டு உடைச்சிட்டாரே பிக்பாஸ் மாயா…

இப்படி இருந்த விஜய் இன்று முன்னணி கதாநாயகானாக வருவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் நடிகர் விஜயகாந்த். விஜய்யின் ஆரம்பகால படங்கள் அனைத்தும் பெரிதளவில் மக்களை கவரவில்லை. ஹீரோயினை கவர் செய்வது வில்லன்களை அடிப்பது போன்ற சாதாரண கதைகளாவே இருந்தன. இது ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை.

இதனால் இவர் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்காந்திடம் சென்று தனது மகனின் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்குமாறு கேட்டு கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட விஜயகாந்த் தன்னால் விஜய் வளரட்டும் என நினைத்து அவரின் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டார்.

இதையும் வாசிங்க:விஜயகாந்திடம் ஜானகி அம்மாள் காட்டிய அன்பு!.. கேப்டனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் ஹைலைட்!..

பொதுவாக எந்தவொரு முன்னணி நடிகரும் மற்ற நடிகர்கள் படத்தில் நடிக்க அவ்வளவு எளிதாக ஒத்து கொள்ளமாட்டார்கள். ஆனால் விஜயகாந்தோ அப்படி செய்யவில்லை. மேலும் எந்தவொரு முன்னணி நடிகரும் தான் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் திரைப்படத்தில் தன்னைதான் முன்னுரிமை கொடுத்து காட்ட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் விஜயகாந்தோ விஜய்யை சண்டை போட வைத்து அமர்ந்து பார்ப்பார்.

அப்படி நல்ல எண்ணம் கொண்ட விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் உள்ளார் என்பதை கண்டிப்பாக விஜய் கேள்விபட்டிருப்பார். ஆனால் விஜய் இதுவரை விஜயகாந்தை நேரில் சென்று பார்க்கவில்லை எனவும் மேலும் சூர்யா போன்ற நடிகர்கள் தங்களது பிராத்தனையை எக்ஸ் தளத்தில் தெரிவித்த போதும் விஜய் அதை கூட இன்னும் செய்யவில்லை எனவும் நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகள் உலாவுகின்றன. விஜய்யின் இந்த செயல் பல பேரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க:சிவாஜியையே ஓவர்டேக் செய்த அசத்தலான நடிப்பு!.. அந்த படத்திலிருந்து டேக் ஆப் ஆன சந்திரபாபு!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.