நடிகரை திருமணம் செய்தாரா கனகா?.. சொந்த தாயே சூனியம் வச்ச கதையா போச்சே!.. அடக்கொடுமையே!..

Published on: December 6, 2023
kanaka
---Advertisement---

Actress kanaka: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் கனகா. இவர் தமிழில் கரகாட்டகாரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ராமராஜன் நடித்திருந்தார். இப்படம் இவர்கள் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்தி தந்து. இதன்பின் நடிகை கனகாவிற்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் வாசிங்க:கழட்டிவிட்ட கமல்!. ஹிட் படத்தின் பார்ட் டூ எடுக்க போகும் ஹெச்.வினோத்?!. ஹீரோ அவரா?!.

இதன்பின் இவர் நடித்த அதிசய பிறவி, எங்க வீட்டு ஆட்டுகாரன் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல ஒரு அந்தஸ்தை பெற்று தந்தன. இவரது கண்களுக்கென தனி ரசிகர்களே உண்டு. தந்து நடிப்பின் மூலம் அந்த கால இளைஞர்கள் அனைவரையும் கட்டி போட்டவர் கனகா.

இவர் தனது சிறு வயதிலேயே நடிக்க வந்தார். ஆனால் அதற்கு முன் இவரது வாழ்வில் மிகப்பெரிய சோகமே நடந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். அவர் சொன்னது என்னவெனில், தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர்தான் என்.டி.ராமராவ். இவர் பொதுவாக ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர். ஒரு முறை இவரிடம் கேரள ஜோதிடர் ஒருவர் உங்களுக்கு முதலமைச்சராகும் அதிர்ஷ்டம் இருப்பதாகவும் ஆனால் அதற்கு ஒரு காரியம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

அதன்படி ஒரு பெண்ணை திருமணம் ஒரு சாஸ்திரத்திற்கு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்போது என்டிஆருடன் அதிக படங்களில் நடித்தவர் நடிகை தேவிகா. அவரிடம் என்டிஆர் இந்த விஷயத்தை கூறியுள்ளார். அப்போது தேவிகாவிற்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது.

உடனே அவர் தனது மகளான கனகாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அப்போது கனகாவிற்கோ சிறுவயதுதான். ஆனால் தனது தாய் சொன்னதால் அவரும் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் திருமணத்தோடு மட்டுமே முடிந்துவிட்டது. இதனால் மனதளவில் பாதித்த கனகாவுடைய அச்சத்தை போக்கதான் பின் சினிமாவில் நடிக்க வைத்தார்களாம். அவ்வாறு அவர் நடித்த திரைப்படம்தான் கரகாட்டகாரன். பெற்ற தாயே மகளின் மன அழுத்தத்திற்கு காரணமாய் இருந்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?si=wJxorYTmgvQ9HuFP&v=wU81rjUN9fA&feature=youtu.be

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.