Connect with us

Cinema News

கழட்டிவிட்ட கமல்!. ஹிட் படத்தின் பார்ட் டூ எடுக்க போகும் ஹெச்.வினோத்?!. ஹீரோ அவரா?!.

பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்க நினைக்கும் சின்ன இயக்குனர்கள் சில சமயம் பல வருங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். சில சமயம் பல மாதங்கள் காக்க வைப்பார்கள். சில சமயம் வருட கணக்காகியும் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். ஆனால், கண்டிப்பாக உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லி நம்ப வைப்பார்கள். இதனால் பெரிய ஹீரோக்களின் வாக்குறுதியை நம்பி சில இளம் இயக்குனர்கள் பல வருடங்கள் காத்திருக்க நேரிடும். இதற்கு பல உதாரணங்கள் திரையுலகில் உண்டு.

சில சமயம் சில ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கே இது நடக்கும். அப்படித்தான் கமலிடம் சிக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கிவிட்டதால் பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கேப்டன் செஞ்ச உதவிக்கு இப்படியா விசுவாசத்தை காட்டுவீங்க?… விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

ஹெச்.வினோத் கடைசியாக இயக்கிய துணிவு படம் வெளியாகி 10 மாதம் முடிந்துவிட்டது. இப்போது வரை ஹெச்.வினோத் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவில்லை. கமல்ஹாசன் அவரை அழைத்து நாம் இணைந்து ஒரு படம் செய்வோம் என சொல்ல கடந்த சில மாதங்களாக அந்த வேலையை பார்த்துவந்தார்.

ஆனால், பிக்பாஸ், மணிரத்தினம் படம், பிரபாஸ் நடிக்கும் ஒரு தெலுங்கு படம் வரிசையாக வேறு படங்களை கமல் கமிட் செய்துவிட்டார். எனவே, இதற்கு மேல் கமலை நம்பி காத்திருக்க வேண்டாம் என நினைத்த ஹெச்.வினோத் தீரன் அதிகரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தாராம்.

ஏற்கனவே தனுஷை வைத்து ஒரு படத்தை எடுக்க ஹெச்.வினோத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தீரன் அதிகாரம் ஒன்று எனில் கார்த்தியே மீண்டும் நடிக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஜப்பான் படம் தோல்வி அடைந்த நிலையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தியும் நடிக்க சம்மதம் சொல்வார் என சொல்லப்படுகிறது. இந்த படம் முடித்தபின் கமலுடன் ஹெச்.வினோத் இணைய வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: வாடிவாசலில் அஜித் நடிக்க வாய்ப்பே இல்லை!.. புள்ளி விபரத்தோடு புட்டுவைக்கும் பிரபலம்..

google news
Continue Reading

More in Cinema News

To Top