Cinema News
பைக் ஓட்ட போயிட்டா சினிமா எப்படி எடுக்க!.. அறிவுரை சொன்னவருக்கு அஜித் கொடுத்த பதில் இதுதான்!…
சில நடிகர்கள் மட்டுமே சினிமாவை தொழிலாக நினைக்காமல் தங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகவும் வைத்திருப்பார்கள். கமல், சிவாஜி, விக்ரம் என பலரையும் இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். ஆனால், சிலர் அதை தொழிலாக மட்டுமே நினைப்பார்கள். நடிகர் அஜித் அந்த ரகம்தான்.
சினிமாவில் என்பது அவருக்கு தொழில் மட்டுமே. பைக் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயக்கும் ஹெலிகாப்டர் என அவருக்கு பல பேஷன்கள் இருக்கிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவர் இதில் எதையாவது ஒன்றைத்தான் செய்து கொண்டிருப்பார்.
இதையும் படிங்க: சும்மா ஒன்னும் இல்ல! புயல் நிவாரணமாக அஜித் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?
முதுகு தண்டில் நிறைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கார் ரேஸில் மட்டும் இப்போது அவர் கலந்துகொள்வதில்லை. விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு கூட பல மாதங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்ய போனார். அதில், கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்துவிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் பைக்கை எடுத்துகொண்டு சில மாதங்கள் அவர் பைக் ஓட்ட போய்விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன்பு சில தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழில் பல படங்களை தயாரித்த ஒரு பிரபல தயாரிப்பாளர் ‘அஜித் அடிக்கடி பைக் ஓட்ட போய்விடுகிறார். ஏதேனும் விபத்து ஏற்பட்டு அவருக்கு எதாவது ஆகிவிட்டால் மீதி படத்தை எப்படி முடிப்பது?.. அவரை நம்பி இருக்கும் தயாரிப்பாளர்களின் நிலை என்ன?., எனவே, அஜித் இதை புரிந்துகொண்டு பைக் ஓட்டுவதை விட்டுவிட்டு சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என சொன்னார்.
இதையும் படிங்க: உதவி கேட்டவரை கண்டுகொள்ளாமல் போன அஜித்… பின்னாடி அவர் செஞ்ச வேலைய பத்தி தெரியுமா?…
இது அஜித்துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. ‘என்னை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். எந்த நாயும் எனக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை’ என பொங்கிவிட்டார். அப்போதெல்லாம் அஜித் மிகவும் கோபப்படும் ஒரு நபராகத்தான் இருந்தார். ஆனால், காலம் அவரை பக்குவம் உள்ள மனிதராக மாற்றியது.
அதேபோல், தயாரிப்பாளர்களும் அஜித் இப்படித்தான் என்பதை புரிந்துகொண்டனர். இப்போதும் அவருக்கு ரூ100 கோடி கொடுத்து படமெடுக்க சில தயாரிப்பாளர்கள் தயாராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.