Connect with us
aji

Cinema News

சும்மா ஒன்னும் இல்ல! புயல் நிவாரணமாக அஜித் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அஜித் சில தினங்களுக்கு முன்புதான் அஜர்பைஜானில் இருந்து முதற்கட்ட செட்யூலை முடித்து சென்னை திரும்பினார்.

அதன் பிறகு ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னையிலேயே இருக்கும் அஜித்தை பற்றி கடந்த மூன்று  நாள்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. அதாவது காரப்பாக்கத்தில் ஏற்பட்ட கடும் மழை , புயல் காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பம் வெள்ளத்தில் சிக்கியது.

இதையும் படிங்க: கேஜிஎஃப் 3 இது கன்பார்ம்.. ஆனா இது சந்தேகம் தான்.. பிரபல இயக்குனர் ப்ரசாந்த் நீல் சொன்ன ஸ்வீட் நியூஸ்..!

அவர்களுக்கு உதவ தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தது அஜித்தான் என்றும் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

கூடவே அஜித்துடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. அவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரும் போது நல்ல வெளிநாட்டவரைப் போல ஒருவரும் கூட வந்திருக்கிறார். யார் என்று பார்த்தால் பாலிவுட் நடிகர் அமீர்கான் என தெரியவந்தது.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

அவர் எப்படி இங்கு மாட்டிக் கொண்டார் என்று விசாரித்ததில் அவரது தாயார் மருத்துவ சிகிச்சைக்காக அவர் சென்னை வந்ததும் அவருடைய தீவிர ரசிகைதான் விஷ்ணு விஷாலின் மனைவி என்றும் அவர்தான் காரப்பாக்கத்தில் தங்கும்படி அறிவுறுத்தியதாகவும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்தை பற்றி பேசும் போதெல்லாம் அவர் என்ன செய்திருக்கிறார்? என்ன உதவிகளை இதுவரை செய்திருக்கிறார் என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து வந்தன. இந்தியாவையே உலுக்கிய கஜா புயலால் பல ஊர்கள் நாசமடைந்தன.

இதையும் படிங்க: எங்க பணத்தில் உதவி செய்றோம்.. தளபதி விஜய் படம் போடுறதில் என்ன தப்பு? வீடியோ வைரல்.. சண்டைக்கு வந்த மக்கள் இயக்கம்..!

அப்போது வெள்ள நிவாரண நிதியாக பிரபலங்கள் பலரும் முன்வந்து பண உதவிகளை செய்ய அந்த நேரத்தில் அஜித்தை பற்றியும் அவர் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. கடைசியாக முதல்வர் அறிக்கை ஒன்று வெளிவர அதில் நடிகர் அஜித்குமார் 15 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

அதாவது எந்தவொரு பப்ளிசிட்டியும் செய்யாமல் பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் அஜித் இன்றளவும் செய்து கொண்டுதான் வருகிறார் என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top