Connect with us

Cinema News

எங்க பணத்தில் உதவி செய்றோம்.. தளபதி விஜய் படம் போடுறதில் என்ன தப்பு? வீடியோ வைரல்.. சண்டைக்கு வந்த மக்கள் இயக்கம்..!

Vijay: சென்னை வெள்ளத்தில் விஜயின் மக்கள் இயக்கத்தினர் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் அவர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்கள் இயக்கத்தினர் தரப்பில் இருந்து பதில் வெளியாகி இருக்கிறது.

சென்னையில் மிக்ஜாங் புயல் காரணமாக நிறைய இடத்தில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதையடுத்து பலரும் இறங்கி நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். அதையடுத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை முடக்கி விட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து எக்ஸில் பதிவு ஒன்றை விஜய் கணக்கில் ட்வீட்டினார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் 7 சீசனை பேன் பண்ணுங்க.. மொக்க கண்டெஸ்டண்ட்… யக்கோவ்..! நீயா பேசுற..!

அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. 

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இந்த நேரத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம், துயர்துடைப்போம் என ட்வீட் தட்டினார்.

இதனை தொடர்ந்து நிறைய மக்கள் நிர்வாகிகள் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் முதியவர்களுக்கு உணவு கொடுக்கும் போது கையில் இன்னொரு நபர் விஜய் புகைப்படத்துடன் நடந்து வந்து கொண்டே இருந்தார். இந்த வீடியோ வைரலானது.

இதையும் படிங்க: தியேட்டரில மட்டும் இல்ல ஓடிடியிலும் போட்டி தான்.. இதுலையாது தப்புமா ஜப்பான்.. இந்த வார ரிலீஸ் அப்டேட்..!

உதவி செய்யும் போது இந்த விளம்பரம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. இதனை தொடர்ந்து, மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் சரவணன் ட்வீட் வெளியிட்டு இருக்கிறார். அதில், சகோதரரே இயக்கத்தின் கொடியும் தளபதி முகமும் மக்களுக்கு சென்றடையணும். அதை பார்த்தால் ரசிகர்களும் உதவி செய்வார்கள். அதுக்கு தான் அந்த புகைப்படம்.

பணத்தில் கடமை செய்பவர்களே தங்கள் முகங்களை போட்டுக்கொள்ளும் போது சொந்த பணத்தில் உதவி செய்பவர்கள் நாங்கள் புகைப்படம் போடுவதில் தப்பில்லை. மக்கள் எந்த நிலையிலும் தவறாக நினைக்கவில்லை! நீங்களே இது போல ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top