Connect with us

Cinema News

ஜப்பான் படத்துக்கு ஓடிடியிலும் போட்டிதான்.. இதுலயாவது தப்புமா ஜப்பான்?.. இந்த வார ரிலீஸ் அப்டேட்!

OTT Release: கோலிவுட்டில் இந்த வார ஓடிடியில் வார இறுதியை சிறப்பாக கையாள செமையான இரண்டு படங்கள் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் இந்த படங்கள் தான் தியேட்டரில் மோதிக்கொண்டதும் ஆச்சரியமான தகவல்.

தியேட்டரை தாண்டி தற்போதைய ரசிகர்கள் ஓடிடி ரிலீஸுக்கு தான் ஆவலாக காத்து இருக்கின்றனர். அந்த வகையில் வாராவாரம் என்ன படம் வரும். அந்த படத்தினை வைத்து வார இறுதியை செமையாக என்ஜாய் செய்து விடலாம் என்ற ஐடியாவில் தான் பலர் இருப்பார்கள்.

இதையும் படிங்க: வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!

அந்த வகையில் இந்த வார ஓடிடியில் நிறைய படங்கள் ரிலீஸுக்கு வருகிறது. அதில் தமிழில் முக்கியமாக இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. கார்த்தி நடிப்பில் ஜப்பான், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரின் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரிலீஸுக்கு வருகிறது.

இந்த இரண்டு படங்களும் தியேட்டரில் ஒரே நேரத்தில் ரிலீஸுக்கு வந்தது. அதில் ஜப்பான் படத்தினை கிராஸ் செய்த ஜிகர்தண்டா மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டு படங்களுமே ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. இதில் ஜப்பான் படத்தினை ராஜுமுருகன் இயக்கி இருந்தார். கொள்ளை கதையை வைத்து கார்த்தி நடித்த இப்படம் சுமார் விமர்சனமே பெற்றது. தற்போது இப்படம் நெட்ப்ளிக்ஸில் 11ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் 7 சீசனை பேன் பண்ணுங்க.. மொக்க கண்டெஸ்டண்ட்… யக்கோவ்..! நீயா பேசுற..!

google news
Continue Reading

More in Cinema News

To Top