விஜயும் இல்ல.. அல்லு அர்ஜுனும் இல்லை!.. அந்த ஹீரோவை இயக்க போகும் அட்லி!.. இது செம டிவிஸ்ட்!..

விஜயை வைத்து 3 படங்களை இயக்கிவிட்டு அப்படியே பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை எடுத்து இந்திய சினிமா உலகில் பெரிய இயக்குனராக மாறி இருக்கிறார் அட்லி. அதிலும் ஜவான் திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்ததால் அட்லியின் கிராப் பெரிய ரேஞ்சுக்கு போய்விட்டது.

சல்மான் கான் கூட அவரின் இயக்கத்தில் ஆசைப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்தது. விஜயின் குட்புக்கில் எப்போதும் அட்லி இருப்பதால் அவரின் அடுத்த படத்தை அட்லி இயக்குவாரா என பலரும் எதிர்பார்த்தனர். ஒருபக்கம், தெலுங்கில் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூனுடன் வெகுநாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதையும் படிங்க: யார் சொல்லியும் கேட்காத அஜித் ஆதிக் சொல்லி கேட்டாரே! இதுதான் ஃபேன் பாய் சம்பவமா?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை அட்லி இயக்க, அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என தொடர்ந்து செய்திகளும் வெளிவந்தது. அதோடு, அப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்தே அட்லி தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் வேகமாக நடந்து வருவதாகவும் இப்போது செய்திகள் கசிந்திருக்கிறது. பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர்.

இதையும் படிங்க: ரஜினியை கண்டெக்டராக காதலித்து நடிகராக்கிய காதலி… ஆனால் கடைசியில் நடந்தது தான் கொடுமை!…

ஏற்கனவே, அட்லியின் குரு இயக்குனர் ஷங்கர் ரன்வீர் சிங்கை வைத்து தமிழில் ஹிட் அடித்த அந்நியன் படத்தை ஹிந்தியில் எடுக்கவிருந்தார். ஆனால், அந்நியன் படத்தின் உரிமை என்னிடம்தான் இருக்கிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கட்டையை போட அது நடக்காமல் போனது.

ranveer

குருவால் முடியாததை இப்போது நிறைவேற்ற போகிறார் அட்லி. ஆனால், இது அந்நியன் ரீமேக் கிடையாது. முழுக்க முழுக்க ஒரு புது கதையில் ரன்வீர் சிங் நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஷங்கரின் மகள் திருமணம் நடந்தபோது ரன்வீர் சிங்குடன் சேர்ந்து அட்லி குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story