Cinema History
எம்.ஜி.ஆருக்கு எழுதிய பாடல்!.. வாலிக்கு தொடர்ந்து வந்த கடிதம்!. அந்த லவ் ஸ்டோரி தெரியுமா?..
ycrist vali: 60களில் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கே போட்டியாக வந்த பாடலாசிரியர்தான் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே அரசியல்ரீதியாக கருத்துவேறுபாடு ஏற்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு வாலிதான் பாடல்களை எழுதினார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராகவே வாலி மாறினார்.
எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய அற்புதமான பாடல்கள் இப்போதும் காற்றில் பாடிக்கொண்டிருக்கிறது. எங்கேயுனும் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் இன்னமும் அந்த பாடல்களை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்.
இதையும் படிங்க: பாதி கிழிச்ச சட்டையில பட்டனும் இல்ல!.. வாலிப பசங்களை பாடாய்படுத்தும் ரேஷ்மா…
குறிப்பாக எம்.ஜி.ஆர் தன்னை புரமோட் செய்துகொள்வதற்கும், மக்களிடம் தன்னை யார் என காட்டிகொள்வதற்கும், அரசியல்ரீதியாக கருத்துக்களை சொல்வதற்கும், அரசியலுக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை சொல்வதற்கும் தனது திரைப்பட பாடல்களையே பயன்படுத்தினார். அந்த பாடல்களையெல்லாம் எழுதியவர் வாலிதான்.
அதில் முக்கியமான பாடல் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாடலாகும். இதுபோன்ற பாடல்கள்தான் எம்.ஜி.ஆரை நாட்டின் முதல்வராகவே அமர வைத்தது. இந்த பாடல் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களுக்கும், திராவிட சித்தாந்தம் கொண்டவர்களுக்கும், குறிப்பாக எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி வேண்டாமென சொன்ன பாடல்!.. வேற படத்தில் வைத்து ஹிட் ஆக்கிய வாலி!.
எனவே, வாலியை பலரும் பாராட்டினார்கள். மேலும், இந்த பாடலை பாராட்டி பலரும் கடிதம் எழுதினார்கள். அப்போது, அந்த பாடல் வரிகளை பாராட்டி வாலிக்கு ரமணி திலகம் என்கிற பெண் கடிதம் எழுதினார். அதோடு ‘உங்களை நேரில் சந்திக்க வேண்டும்’ என தினமும் அவருக்கு கடிதம் எழுதினார். தினமும் அந்த கடிதம் வர ஒருநாளை வாலி அவரை நேரில் வரசொன்னார்.
அந்த சந்திப்பு நட்பாக மாறி பின்னர் காதலிலும் முடிந்து அவரையே வாலி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலாஜி என்கிற மகனும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உங்களாலதான் படம் ரிலீஸாகவே இல்ல!. வாலியிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..