எம்.எஸ்.வி வேண்டாமென சொன்ன பாடல்!.. வேற படத்தில் வைத்து ஹிட் ஆக்கிய வாலி!.
1960களில் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் முன்னணி பாடலாசிரியராக இருந்தபோதே சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். கண்ணதாசனை போலவே ஆன்மிகம், காதல், சோகம், கண்ணீர், தத்துவம் என பல சூழ்நிலைகளுக்கு பாடல்களை எழுதியவர்.
கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அரசியல் ரீதியாக மனஸ்தாபம் வந்த போது எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசன் பாடல்களை எழுதும் சூழ்நிலை ஏற்படவில்லை. எனவே, அந்த இடைவெளியை வாலி சரியாக பயன்படுத்திக்கொண்டார். வாலியின் வரிகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்து போனது.
இதையும் படிங்க: கோபத்தில் ‘முடியாது’ என மறுத்த வாலி!. சமாதானம் செய்த கலைஞர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன அதே டயலாக்!.
எம்.ஜி.ஆரின் பல ஹிட் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் தன்னை மக்களிடம் புரமோட் செய்ய வாலியின் வரிகள் அதிகம் உதவியது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... ஏன் என்ற கேள்வி.. உள்ளிட்ட பல பாடல்களை வாலி எழுதினார்.
திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு பாடலாசிரியர் சொல்லும் வரிகள் இசையமைப்பாளருக்கோ அல்லது இயக்குனருக்கோ பிடிக்காமல் போகும். எனவே, அந்த பாடல் வரிகளை அந்த கவிஞர் வேறு ஒரு படத்திற்கு பயன்படுத்திக்கொள்வார். இது காலம் காலமாக நடப்பதுதான்.
இதையும் படிங்க: எல்லா பாட்டும் எழுதினது நான்! ஆனா பேரு யாருக்கு தெரியுமா? ரஜினி படத்தில் நடந்த குளறுபடிய சொன்ன வாலி
பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்திற்காக வாலி ஒரு பாடலை எழுதினார். ஆனால், வரிகள் நீளமாக இருப்பதாக கூறி அந்த வரிகள் வேண்டாம் என எம்.எஸ்.வி மறுத்துவிட்டார். அன்று மதியம் ‘அரச கட்டளை’ படத்தில் பாடல் எழுதப்போனார் வாலி. அந்த படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். இதுவும் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த திரைப்படம்தான்.
அந்த பாடல் வரிகளை வாலி மகாதேவனிடம் காட்டி ‘இந்த வரிகளுக்கு டியூன் போடுங்கள்’ என சொல்லி மகாதேவனும் பிரமாதமான ட்யூனை போட்டார். அதுதான் ‘புத்தம் புதிய புத்தகமே.. உன்னை புரட்டிப்பார்க்கும் புலவன் நான்’.. என்கிற பாடலாகும். எம்.எஸ்.வி வேண்டாம் என சொன்ன பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்த தகவலை வாலியே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms