Cinema News
அஜித்துக்கு கோபம் வராது! வந்தா என்ன பண்ணுவார் தெரியுமா?.. நடிகர் சொன்ன சீக்ரெட்..
Actor Ajith: அதிக ரசிகர் படைபலத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகராக அஜித் இருக்கிறார். பப்ளிசிட்டி பிடிக்காத நடிகராக இருந்தாலும் அவருடைய புகைப்படங்கள் , வீடியோக்கள் என இணையத்தில் மிகவும் வைரலாகி விடுகின்றது.
அஜித் திரும்பி பார்க்கவில்லை என்றாலும் சரி அவரை பார்த்தாலே போதும் என்றுதான் ரசிகர்களின் மன நிலையாக இருக்கின்றது. அந்தளவுக்கு அனைவரும் விரும்பும் நடிகராகவே மாறியிருக்கிறார் அஜித். அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் தன் நோக்கம் எதுவோ அதை நோக்கியே பயணித்து வருகிறார்.
இதையும் படிங்க: அஜித் கழட்டிவிட்டா இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க!.. விக்னேஷ் சிவனுக்கு குடைச்சல் கொடுக்கும் பிரதீப்!..
தற்போது விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து நேற்றுதான் புறப்பட்டார் அஜித். அது சம்பந்தமான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை விமான நிலையத்திற்குள் வரும் அஜித்தை பின் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வருவதும் போட்டோ எடுப்பதுமாக இருந்தனர்.
இந்த நிலையில் பிரபல காமெடி மற்றும் வில்லன் நடிகராக இருந்தவர் சக்திவேல். அவர் அஜித்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அட்டகாசம் படத்தில் அஜித்துடன் நடித்திருக்கிறார் சக்திவேல். அஜி்த் பழகுவதில் மிகவும் எளிமையானவர் என்றும்,
இதையும் படிங்க: கழுவி கழுவி ஊத்துரானுங்க! பேர கேட்டாலே திட்ரானுங்க – ரொம்பவே அடிவாங்கிய நயன்! இதுதான் மேட்டரா?
சத்தமாகவே பேசமாட்டார் என்றும் அஜித்திற்கு கோபமே வராது என்றும் கூறினார். அப்படியே கோபம் வந்தாலும் சற்று முறைத்துப் பார்ப்பார். அதன் பிறகு பேசாமல் அமைதியாகிவிடுவார் என்று சக்திவேல் கூறினார்.
கோபத்தில் பேசினால் பிரச்சினை அதிகமாகுமே தவிர குறையாது என்பதற்காகவே அமைதியாகிவிடுவார். சிறிது நேரம் யாரிடமும் பேசமாட்டார் என்று சக்திவேல் கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக அஜித் மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: யாஷின் அடுத்த இயக்குனர் சத்யராஜின் மகளா.. இவங்க மாதவனின் மனைவி தானே… குழப்பத்தில் ரசிகர்கள்