Connect with us
nayan

Cinema News

கழுவி கழுவி ஊத்துரானுங்க! பேர கேட்டாலே திட்ரானுங்க – ரொம்பவே அடிவாங்கிய நயன்! இதுதான் மேட்டரா?

Actress Nayanthara: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை  நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கியமான நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரிய நடிகையாகவும் வலம் வருகிறார்.

சமீபகாலமாக பெண்களை  மையப்படுத்தி அமையும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். கடைசியில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. நிலேஷ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நயனுக்கு ஜோடியான ஜெய் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: யாஷின் அடுத்த இயக்குனர் சத்யராஜின் மகளா.. இவங்க மாதவனின் மனைவி தானே… குழப்பத்தில் ரசிகர்கள்

கிட்டத்தட்ட 10 வருடங்கள் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஒரு காரணமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் ராஜாராணி படத்தில் நயனுக்கு அப்பாவாக நடித்த சத்யராஜ் இந்தப் படத்தில் செஃபாக நடித்திருக்கிறார்.

அன்னபூரணி படத்தில் நடிக்கும் போது நயன் இதுவரை எனக்கு அப்பாவாக நடித்த யாரும் இந்தப் படத்தில் அப்பாவாக நடிக்கக் கூடாது என கண்டீசன் போட்டாராம். அதுமட்டுமில்லாமல் என் அனுமதி இல்லாமல் எந்த சீனாகட்டும் எதுவாகட்டும் அனுமதி பெற்ற பிறகே வெளியே போக வேண்டும் எனக் கூறிவிட்டாராம் நயன்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து எஸ்கேப் ஆன இயக்குனர்…! காமெடி நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

அன்னபூரணி படம் நயனுக்கு 75 வது படமும் கூட. 20வருட கெரியரில் 75 படங்களில் நடித்த ஒரு ஒரு சூப்பர் லேடி நயன் என்றுதான் சொல்ல வேண்டும். அதனாலேயே அந்த 75 படங்களின் லோகோவையும் படம் ஆரம்பிக்கும் போது இயக்குனர் காட்டியிருப்பாராம்.

ஆனால் நயன் படத்தில் அவர் பெயருக்கு முன்னாடி லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை போடக் கூடாது என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் அவர் பேச்சை மீறி இயக்குனர் போட்டுவிட்டாராம். ஏன் போடக் கூடாது என்ற காரணத்தையும் நயன் கூறினார்.

இதையும் படிங்க:

அதாவது சமூக வலைதளங்களில் ஒரு பத்து பேர் பெருமையால பேசினால் 50 பேர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே திட்டுகிறார்களாம். இருந்தாலும் அந்தப் பட்டத்திற்காக நான் இல்லை என்றாலும் எனக்கு அது வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறேன் என நயன் கூறினார். மேலும் நான் பண்ணும் படங்களாகட்டும் தேர்ந்தெடுக்கும் கதைகளாகட்டும் எதுவுமே அந்த டைட்டிலுக்காக இல்லை என்றும் தெளிவாக கூறினார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top