ஏமாந்த மக்களை ஏமாத்துறதுதான் சமூகநீதியா?.. விடுதலை 2 சம்பள பாக்கி.. வெற்றிமாறனை விளாசும் மக்கள்!..

சாமானிய மக்களை போலீஸ் கொடூரமாக வஞ்சித்தது எப்படி என்கிற படத்தை இயக்கிய வெற்றிமாறன் அதே சாமானிய மக்களுக்கு சேர வேண்டிய சரியான சம்பளத்தை கொடுக்கவில்லை என்கிற எதிர்ப்பு குரல் தற்போது எழுந்துள்ளது.

விடுதலைப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சகர் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தாலும் 4 கோடி ரூபாயில் எடுத்துக் கொடுப்பதாக சொன்ன அந்தப் படத்தை 60 கோடி பட்ஜெட்டுக்கு உயர்த்தி விட்டதாக வெற்றிமாறன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கில்லி ரீ ரிலீஸ் குவித்த கலெக்‌ஷன்!.. தளபதியை சந்தித்து பிரபல தியேட்டர் ஓனர் பார்த்த வேலை!..

வெறும் 40 கோடி மட்டுமே விடுதலை படத்தின் முதல் பாகம் வசூல் செய்து நஷ்டத்தை கொடுத்ததாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதனை ஈடுகட்ட விடுதலை 2 படத்தையும் தற்போது எடுத்து முடித்து வெளிநாடுகளில் உள்ள விருது விழாக்களில் படத்தை திரையிட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.

சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அந்த படத்தில் தென்காசி பகுதி மக்கள் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுக்க பலரை நிர்வாணமாகவும் வெற்றிமாறன் நடிக்க வைத்திருந்தார்.

இதையும் படிங்க: ‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

இந்நிலையில், ₹500 ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் பலருக்கும் 350 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் துணை நடிகர்களை அழைத்து வந்த ஏஜெண்டுகள் செய்த மோசடி குறித்து படக்குழுவினரிடம் கூறியும் எந்த ஒரு பயனும் இல்லை என பொதுமக்கள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் இதையெல்லாம் கவனிக்க மாட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.

 

Related Articles

Next Story